![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fd/NanditaDas2008.jpg/640px-NanditaDas2008.jpg&w=640&q=50)
நந்திதா தாஸ்
இந்திய நடிகை, இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
நந்திதா தாஸ் (பிறப்பு 7 நவம்பர் 1969) ஓர் இந்திய நடிகையும் இயக்குனரும் ஆவார். ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, உருது, மராத்தி, ஒரியா மற்றும் கன்னடம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளில் 40 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுள் ஃபயர் (1996), எர்த் (1998), பாவன்டர் (2000), கன்னத்தில் முத்தமிட்டால் (2002), அழகி (2002) , காம்லி (2006), மற்றும் பிஃபோர் தி ரெயின்ஸ் (2007) ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் இயக்கிய ஃபிராக் (2008), டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் 50 க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் பயணம் செய்து 20 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றது. இவர் இயக்கிய இரண்டாவது படம் மன்டோ (2018). 20 ஆம் நூற்றாண்டின் இந்தோ-பாகிஸ்தானி சிறுகதை எழுத்தாளர் சதத் ஹசன் மண்டோவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது [1] இந்தத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் " அன் செர்டெய்ன் ரிகார்ட் " பிரிவில் திரையிடப்பட்டது. செப்டம்பர் 2019 இல், தாஸ் 'இந்தியாஸ் காட் கலர்' என்ற இரண்டு நிமிட பொது சேவை அறிவிப்பு இசைக் காணொளி ஒன்றைத் தயாரித்தார். இந்த இசைக்காணொளி நிறப் பிரச்சினையைப் பற்றியது. .மேலும் இது. இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட மனிதர்களின் தோல் நிறத்தைக் கொண்டாட பார்வையாளர்களை வலியுறுத்துகிறது. இவர் எழுதிய முதல் புத்தகம் 'மான்டோ & ஐ' திரைப்படத்தை உருவாக்கும் அவரது 6 வருட நீண்ட பயணத்தை விவரிக்கிறது. லாக்டவுன் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறை மற்றும் வேலைச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும், லிஸ்டன் டு ஹெர் என்ற குறும்படத்தை இவர் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்தார்..[2]
நந்திதா தாஸ் Nandita Das | ||||
---|---|---|---|---|
![]() | ||||
பிறப்பு | நவம்பர் 7, 1969 (1969-11-07) (அகவை 54) புதுடில்லி, இந்தியா | |||
தொழில் | நடிகை, திரைப்பட இயக்குனர் | |||
நடிப்புக் காலம் | 1989, 1996 - இன்றுவரை | |||
துணைவர் | செளமியா சென் (2002 – 2005) (விவாகரத்து) சுபோத் மஸ்காரா (2010-இன்றுவரை) | |||
குறிப்பிடத்தக்க படங்கள் | ஃபயர் (1996 film) (1996) எர்த் (1998 film) (1998) | |||
|
கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவில் நந்திதா இரண்டு முறை பொறுப்பு வகித்துள்ளார். 2005 இல், முக்கிய போட்டி நடுவர் குழுவில் பணியாற்றினார். 2013 இல், குறும்படங்களுக்கான நடுவர் மன்றத்தில் பணியாற்றினார். சினி பவுண்டேசன் எனும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கான முகவான்மை நிறுவனத்திலும் பனியாற்றியுள்ளார். 2011 ஆம் ஆண்டில், அவர் நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பிரெஞ்சு அரசாங்கத்தால் கலை மற்றும் எழுத்துக்கான செவாலியர் தெ எல் ( Chevalier de l' Ordre des Arts et des Lettres சிறப்பினைப் பெற்றார்.[3] "சினிமாத் துறையில் இந்தோ-பிரெஞ்சு ஒத்துழைப்பின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக" அவர் பாராட்டப்பட்டார்."[4] 2009 ஆம் ஆண்டில், கலைஞர் டிடூவான் லாமசோவின் "உலகப் பெண்கள்" என்ற திட்டத்தில் நந்திதா தாஸ் இடம்பெறும் முத்திரையை பிரான்ஸ் வெளியிட்டது.[5][6]
வாஷிங்டன், டிசியில் சர்வதேச புகழ்மண்டபத்தில் உள்ள சர்வதேச மகளிர் மன்றத்தில் இடம்பெற்ற முதல் இந்தியர் நந்திதா ஆவார். அவர் 2011 இல் கலை மற்றும் உலகிற்கு அவர் அளித்த தொடர்ச்சியான பங்களிப்புகளுக்காக" "நமது காலத்தின் கவரக்கூடிய சினிமா கலைத் தலைவர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார்."[7][8][9][10] அன்னா ஃபெண்டி, ஹெய்டி க்ளம் மற்றும் மேடம் சென் ஜிலி ஆகியோர் அவரோடு இதில் அறிமுகமானவர்கள்.[11]