![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bf/Shiva_as_the_Lord_of_Dance_LACMA_edit.jpg/640px-Shiva_as_the_Lord_of_Dance_LACMA_edit.jpg&w=640&q=50)
நடராசர்
கூத்தன் / From Wikipedia, the free encyclopedia
சைவர்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், அவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே கூத்தன் (வடமொழி - நடராசர்) திருக்கோலம் ஆகும். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும்.
விரைவான உண்மைகள் நடராசர், அதிபதி ...
நடராசர் | |
---|---|
![]() பத்தாம் நூற்றாண்டின் சோழர் காலத்திய வெண்கல நடராஜர் சிலை, லாஸ் ஏஞ்சலஸ் அருங்காட்சியகம் | |
அதிபதி | நடனத்திற்கு அதிபதி |
வேறு பெயர்கள் | கூத்தன், சபேசன், அம்பலவாணன் |
வகை | சிவன் |
நூல்கள் | Anshumadbhed agama Uttarakamika agama |
மூடு
பஞ்சகுண சிவமூர்த்திகளில் நடராசர் ஆனந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.