From Wikipedia, the free encyclopedia
சேர் தோமசு மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 10 மார்ச் 1760 – 17 சனவரி 1824) ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குட்பட்ட நாடாக இலங்கை மாறியதன் பின்னர் நியமிக்கப்பட்ட இரண்டாவது பிரித்தானிய தேசாதிபதி ஆவார். சார் பிரடெரிக் நோத் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சீர்த்திருத்த நடவடிக்கைகள் சேர் தோமசு மெயிற்லண்ட் காலத்திலும் தொடர்ந்தன. அத்துடன் மேலும் சில சீர்த்திருத்தங்கள் இவரால் மேற்கொள்ளப்பட்டன. பிரித்தானிய அரசால் சூலை 19 1805 முதல் மார்ச்சு 19 1811 வரை இவர் பதவியில் இருந்தார்.
சர் தோமசு மெயிட்லாண்ட் Sir Thomas Maitland | |
---|---|
டூசான் லூவர்சூர் உடனான சந்திப்பில் மெயிட்லாண்ட் | |
2-வது பிரித்தானிய இலங்கை ஆளுனர் | |
பதவியில் 19 சூலை 1805 – 19 மார்ச் 1811 | |
முன்னையவர் | பிரடெரிக் நோர்த் |
பின்னவர் | ஜோன் வில்சன் |
8-வது இலங்கை கட்டளை அதிகாரி | |
பதவியில் 1805–? | |
முன்னையவர் | டேவிட் டக்ளசு வெமிசு |
பின்னவர் | ஜோன் வில்சன் |
மால்ட்டா ஆளுநர் | |
பதவியில் 23 சூலை 1813 – 17 சனவரி 1824 | |
முன்னையவர் | ஐல்ட்பிராண்ட் ஓக்சு |
பின்னவர் | பிரான்சிசு ராடன்-ஏசுடிங்சு |
இயோனியன் தீவுகளின் தூதுவர் | |
பதவியில் 1816–1823 | |
முன்னையவர் | யேம்சு கேம்பல் |
பின்னவர் | பிரெடெரிக் ஆடம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இசுக்கொட்லாந்து | 10 மார்ச்சு 1760
இறப்பு | 17 சனவரி 1824 63) மால்ட்டா | (அகவை
Military service | |
பற்றிணைப்பு | ஐக்கிய இராச்சியம் |
கிளை/சேவை | பிரித்தானிய இராணுவம் |
தரம் | லெப்டினண்ட் ஜெனரல் |
அலகு | 62-வது பூட் ரெஜிமண்ட் |
கட்டளை | இலங்கைக் கட்டளை அதிகாரி |
போர்கள்/யுத்தங்கள் | பெனின்சுலார் போர் நெப்போலியப் போர்கள் |
இவரால் செய்யப்பட்ட முக்கிய சீர்த்திருத்தங்களாவன:
இலங்கை வரலாற்றில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பல நிர்வாகக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. சேர் பிரடெரிக் நோத் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சீர்த்திருத்த நடவடிக்கைகள் சேர் தோமசு மெயிற்லண்ட் காலத்திலும் தொடர்ந்தன. பிரடெரிக் நோத்தைவிட இவரால் மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தங்கள் இலங்கையின் பிற்கால அரசியல் வளர்ச்சியில் ஒரு அடிப்படையை ஏற்படுத்தின. பிரடெரிக் நோத்தினால் செயற்படுத்த முடியாது போன திட்டங்களை அவர் செயற்படுத்தி வெற்றிகண்டார். குறிப்பாக உள்நாட்டு மக்களின் நலன்களில் இவர் கரிசனை காட்டியமை ஒரு விசேட அம்சமாக வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.