தைலம் (மரம்)
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
தைல மரம் (Eucalyptus, யூகலிப்டஸ் மரம்) என்பது மிர்டேசியே (Myrtaceae) என்ற குடும்பவகையைச் சேர்ந்த தாவரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் ஆங்கிலேயர்களால் 1843 ஆம் ஆண்டு அதிக விளைச்சலைத் தரும், எரிபொருள்மரவகை சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளுக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிப்பட்டது. தைலமரங்களில் 700-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மி.மீ லிருந்து 1500 மி.மீ. வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும் இயல்புடையவை. வறண்ட மற்றும் சமவெளிப்பகுதிகளில் வளரும் யூகலிப்டஸ் டெரிடிகார்னிஸ், யூக்கலிப்டஸ் கமால்டுலென்ஸிஸ் ஆகிய வகைகள் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மிகவும் ஏற்றவை. இம்மரம் 8 மணி நேரத்திற்கு தேவையான நீரைதானே உறிஞ்சி எடுத்து ஆவியாக்கி விடுகிறது. இந்த மரம் நிலத்தின் அடி ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரையும் கணிசமான அளவு குறைத்து விடுகிறது. இந்த மரம் தற்போது திருவண்ணாமலை மாவட்டம் ஆனந்தவாடி R.F-ல் சுமர் 11,000 ஏக்கரில் உள்ளது.
தைலம் | |
---|---|
யூகலீப்டஸ் டெர்டிகோர்னிஸின் மொட்டுகள், இணைசூலக வெடிகனி, தழைகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | ரோசிட்கள் |
வரிசை: | மிர்த்தாலேஸ் |
குடும்பம்: | மிர்த்தசியே |
துணைக்குடும்பம்: | மிர்த்தொய்டே |
சிற்றினம்: | யூகலீப்ட்டே |
பேரினம்: | யூகலீப்டஸ் L'Hér. |
இனம் | |
கிட்டத்தட்ட 700 துணையினங்கள்; | |
இயல் நெடுக்கம் | |
வேறு பெயர்கள் | |
அரோமடெண்றோன் Andrews ex Steud. |