தைட்டானியம்(II) குளோரைடு
From Wikipedia, the free encyclopedia
தைட்டானியம் குளோரைடு (Titanium(II) chloride) TiCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் அதிக வினைத்திறம் கொண்டது அகும் [1]. இதனால் இச்சேர்மம் மிகச்சிறிய அளவிலேயே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. Ti(II) ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும். ஆக்சிசனுடன் அதிக நாட்டம் கொண்டிருப்பதால் தண்ணீருடன் வினைபுரிகையில் மீளா வினையாக ஐதரசனை உற்பத்தி செய்கிறது. வழக்கமான தயாரிப்பு முறை என்பது 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் TiCl3 சேர்மத்தை விகிதச்சமமற்ற விகிதச் சிதைவுக்கு உட்படுத்தும் முறையாகும். ஆவியாகக் கூடிய TiCl4 இன் இழப்பால் இவ்வினை இயக்கப்படுகிறது
- 2 TiCl3 → TiCl2 + TiCl4
இனங்காட்டிகள் | |
---|---|
10049-06-6 N | |
ChemSpider | 8466246 Y |
EC number | 233-164-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 66228 |
| |
UNII | BK26WI342Q N |
பண்புகள் | |
Cl2Ti | |
வாய்ப்பாட்டு எடை | 118.77 g·mol−1 |
தோற்றம் | கருப்பு, அறுகோணப் படிகத் திட்டம் |
அடர்த்தி | 3.13 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,035 °C (1,895 °F; 1,308 K) |
கொதிநிலை | 1,500 °C (2,730 °F; 1,770 K) |
+570.0·10−6 செ.மீ3/மோல் | |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
ஈயூ வகைப்பாடு | Xn C |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இவ்வினை வனேடியம்(III) குளோரைடை வனேடியம்(II) குளோரைடாகவும் வனேடியம் நாற்குளோரைடாகவும் மாற்றுகின்ற முறையைப் போன்ற வினையாகும் CdI2 கட்டமைப்பு அடுக்காலானதைப் போன்ற அமைப்பில் தைட்டானியம் குளோரைடு படிகமாகிறது. இதன்படி Ti(II) மையங்கள் ஆறு குளோரைடு ஈந்தணைவிகளுடன் எண்முக ஒருங்கமைவைக் கொண்டுள்ளன.