தேரில் நகர்ந்து தாக்கும் படை From Wikipedia, the free encyclopedia
தேரில் நகர்ந்து தாக்கும் படை தேர்ப் படை. தேரில் குதிரைகள் பூட்டப்பட்டன. அதை தேர்ப்பாகன் செலுத்தினான். தேருக்குள் இருந்துகொண்டு வீரர்கள் அம்பெய்தனர், அல்லது பிற ஆயுதங்களால் தாக்கினர். வெற்றிக்குப் பின்னர் வீரர்களும், மற்றவர்களும் சேர்ந்து தேருக்கு முன்னும் பின்னும் குரவை ஆடுவர்.
தொல்காப்பியம் இதனைத் தேரோர் களவழி என்று குறிப்பிடுகிறது. [1]
சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, வெண்டேர்ச் செழியன், திண்டேர் ... குட்டுவன், கொடித்தேர்ப் பொறையன், கொடித்தேர்ச் செழியன், இயல் தேர் வழுதி முதலானோர் தேர்ப்படை கொண்டிருந்த சங்ககால மன்னர்கள்.
தேரில் போரிடுவது பற்றி கலிங்கத்துப்பரணி போன்ற இலக்கியங்களில் தகவல்கள் உண்டு.
Seamless Wikipedia browsing. On steroids.