தேயிலை
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
தேயிலை (Tea, Camellia sinensis) ஒரு பசுமைத் தாவரம். இது ஒரு வாணிகப் பயிராகும் இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலைத்திணை தொடக்கத்தில் கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் காணப்பட்டது. வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வெவ்வேறு வகையான தேயிலைகள் இவ்வின நிலைத்திணையிலிருந்து பெறப்பட்டாலும், பக்குவப்படுத்தல் முறையில் வேறுபடுகின்றன. குக்கிச்சாவில் இவ்வின நிலைத்திணையின் இலைகளுக்குப் பதிலாக கொப்பு, தண்டு என்பவற்றைப் பக்குவப்படுத்திச் செய்யப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தேயிலை | |
---|---|
Camellia sinensis இலைகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Ericales |
குடும்பம்: | Theaceae |
பேரினம்: | கமேல்லியா Camellia |
இனம்: | C. sinensis |
இருசொற் பெயரீடு | |
Camellia sinensis (L.) Kuntze | |
இந்நிலைத்திணையின் இருசொற்பெயர் Camellia sinensis என்பதாகும், இங்கு sinensis என்பது இலத்தீன் மொழியில் சீனாவைச் சேர்ந்த என்ற பொருள்படும். Camellia என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661–1706) என்ற இயேசு சபை பாதிரியாருடைய பெயரின் இலத்தீனாக்கப்பட்ட வடிவமாகும். அருட்திரு. செரொக் காமெல் தேயிலைச் செடியைக் கண்டுபிடிக்கவோ அல்லது பெயரிடவோ இல்லை எனினும் திணைவகையீட்டை உருவாக்கிய கரோலஸ் லின்னேயஸ் அறியப்பட்ட தாவரவியலாளரான அருட்திரு. செரொக் காமெல் அடிகள் அறிவியல் துறைக்காற்றிய சேவையை பாராட்டும் வகையில் இப்பேரினத்துக்கு இப்பெயரை இட்டார்.