![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
தேன்கனிக்கோட்டை
From Wikipedia, the free encyclopedia
தேன்கனிக்கோட்டை (Denkanikottai), இந்தியாவின் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, தேன்கனிக்கோட்டை வட்ட நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். தேன்கனிக்கோட்டை நகரம் சோழர்கள், போசளர்கள் , முகலாயர்கள் மற்றும் பிரித்தானியர்கள் என பல்வேறு பேரரசுகள் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்துள்ளது. தேன்கனிக்கோட்டை சோழர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்துள்ளது என்பதற்கு 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கிடைத்துள்ளது. போசளர்கள் கால கட்டிடக்கலைக்கு வேட்டையாடிய பிரான் (பேட்டராய சுவாமி கோயில்) திருக்கோயில் சிறந்த சான்றாகும்.
விரைவான உண்மைகள்
தேன்கனிக்கோட்டை | |||||||
அமைவிடம் | 12°31′49″N 77°47′24″E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கிருஷ்ணகிரி | ||||||
வட்டம் | தேன்கனிக்கோட்டை | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
மக்கள் தொகை | 24,252 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/denkanikottai |
மூடு