சீனாவின் அணுக்கரு பாதுகாப்பு முகமை From Wikipedia, the free encyclopedia
தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் ( National Nuclear Safety Administration) [[சீனா|என்பது அணுசக்தி பாதுகாப்பை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட சீனாவில் உள்ள அனைத்து அணுசக்தி உள்கட்டமைப்புகளின் மேற்பார்வைக்கும் பொறுப்பான ஒரு மத்திய அரசு நிறுவனமாகும். இவ்வமைப்பு அணுசக்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்கிறது மற்றும் ஒப்புதல் பொறிமுறையை ஒழுங்குபடுத்துகிறது. [2]
国家核安全局 Guójiā Hé ānquán Jú | |
ஒழுங்குமுறை முகமை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1984 |
வகை | அணுக்கரு பாதுகாப்பு |
ஆட்சி எல்லை | சீனா |
தலைமையகம் | பீகிங் |
ஒழுங்குமுறை முகமை தலைமை |
|
மூல நிறுவனம் | மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் [1] |
மூல ஒழுங்குமுறை முகமை | மாநிலக் கவுன்சில் |
வலைத்தளம் | nnsa |
தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் (1984-1989) 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிறுவப்பட்டது. இது சீனாவின் பிரதான நிலப்பரப்பில் அணுசக்தி பாதுகாப்பை சுயாதீனமாக ஒழுங்குபடுத்திய மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தின் துணை நிறுவனமாகும்.[1]
1990 ஆம் ஆண்டு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையமாக மாறியது.
1998 ஆம் ஆண்டு தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டது.
2008 ஆம் ஆண்டு மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் என்று அழைக்கப்படும் சீன அரசின் முழு அமைச்சகமாக மேம்படுத்தப்பட்டது மற்றும் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் அதன் நிர்வாக வரம்பில் தக்கவைக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு புதிய சட்டங்கள் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தின் அதிகாரங்களை வலுப்படுத்தியது. இதனால் புதிய நிறுவன வழிமுறைகள், தெளிவான தொழிலாளர் பிரிவு மற்றும் தகவல்கள் மேலும் வெளிப்பட்டன. [3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.