From Wikipedia, the free encyclopedia
தேசம் (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும். நாடு (Country) என்பது நிர்வாகத்துக்காக தோற்றுவிக்கப்பட்ட பகுதியாகும். உலகில் பல தேசங்களை கொண்ட நாடுகளும் உண்டு.[1] ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகள் பல நாடுகளாக பிரிந்தும் காணப்படுகின்றன.[2][3]
பெரும்பாலும் தேசம் என்பதற்கு மொழி, மரபு, இனக்குழு, குடிவழக்கு போன்றவை ஒருங்கே அமையப்பெற்றதாக வரையறை வைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் தமிழ்த்தேசம் என்பதற்கு வரையறையாக மொழியே வைத்துச் சொல்லப்படுகிறது.[கு 1] அதன்படி வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்த்தேசம் என வரையறுக்கப்பட்டது.[கு 2] வேங்கடத்துக்கு வடக்கில் வேற்று மொழியாளர்களான வடுகர்கள் வாழும் வடுகர் தேஎம் என்னும் மொழி பெயர்ந்த தேயம் வருவதாக கூறப்படுகிறது.[கு 3][கு 4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.