துர்டுக்
சம்மு காசுமீரில் உள்ள ஒரு சிற்றூர் / From Wikipedia, the free encyclopedia
துர்டுக் (Turtuk) இந்தியாவின் வடக்கே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லே மாவட்டம், நூப்ரா வருவாய் வட்டத்தில், லடாக் - பல்திஸ்தான் எல்லையை ஒட்டி பாயும் சியாக் ஆற்றின் கரையில் உள்ள கிராம ஊராட்சி ஆகும்.[1][2][3]
துர்டுக் | |
---|---|
மலைக்கிராமம் | |
துர்டுக்கில் பாயும் சியாக் ஆறு | |
ஆள்கூறுகள்: 34.847°N 76.827°E / 34.847; 76.827 | |
நாடு | ![]() |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | லே |
வட்டம் | நூப்ரா வட்டம் |
அரசு | |
• வகை | ஊராட்சி |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,371 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | பால்டி, லடாக்கி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மக்கள்தொகை குறியீட்டு எண் | 913 |
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு வடக்கு நிலப்பகுதியில் உள்ள பல்திஸ்தான் பிரதேசத்தில் இருந்த துர்டுக் மலைக்கிராமத்தில்[4]மலைவாழ் பழங்குடி இசுலாமியர்கள் வாழ்கின்றனர். 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போரில் துர்டுக் கிராமம் இந்திய இராணுவம் கைப்பற்றியதால், தற்போது இக்கிராமம் இந்திய ஆட்சி நிர்வாகத்தில் உள்ளது.[5] .[6][7] [8] துர்டுக் கிராம மக்கள் பால்டி மற்றும் லடாக்கி மொழிகள் பேசுகின்றனர்.[9] சுற்றுலாத் தலமான இக்கிராமம் கடல்மட்டத்திலிருந்து 2900 மீட்டர் உயரத்தில் இமயமலையில் உள்ளது.
சியாச்சின் கொடுமுடிக்கு செல்லும் முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக துர்டுக் கிராமம் உள்ளது. [10][11] இங்கு அத்திப் பழம், வெள்ளை கோதுமை அதிகம் பயிரிடப்படுகிறது. 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, துர்டுக் கிராமம் 3371 மக்கள்தொகை கொண்டுள்ளது.