துகாங்கிடே (Dugongidae) என்பது சைரேனியாவரிசையில் உள்ள ஒரு குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் எஞ்சியிருக்கும் ஒரு சிற்றினம், ஆவுளியா (துகோங் துகோன்) ஆகும். சமீபத்தில் அழிந்துபோன சிற்றினமாக, இசுடெல்லர்சு கடல் பசு (கைட்ரோடாமலிசு ஜிகாசு) மற்றும் புதை படிவ பதிவுகளிலிருந்து அறியப்பட்ட பல அழிந்துபோன சிற்றினங்களும் இக்குடும்பத்திலிருந்தன.
விரைவான உண்மைகள் துகாங்கிடே புதைப்படிவ காலம்:பிந்தைய ஈயோசீன்-கோலோசீன், உயிரியல் வகைப்பாடு ...
துகாங்கிடேயின் உடல் எடையானது இளம் உயிரிகள் என்றால் 217 முதல் 307 கிலோ வரையும், வயது வந்த இளம் உயிரி என்றால் 334 முதல் 424 வரையும் நன்கு வளர்ந்த உயிரிகள் என்றால் 435 முதல் 568.5 வரையும் காணப்படும். இதனுடைய உடலின் வெப்பநிலை 24 முதல் 34.2 °Cவரை மாறுபடும். இதயத் துடிப்பு அளவீடுகள் 40 முதல் 96 பிபிஎம் வரை இருக்கும். இவை தனிப்பட்ட துகாங்குகளுக்கு இடையில் மாறுபடும். தண்ணீருக்கு வெளியே இதன் சுவாச விகிதம் 1 முதல் 33 வரை இருக்கும்.[1]
சிற்றினம் † கைட்ரோடமாலிசு ஜிகாசு, இசுடெல்லர்சு கடல் பசு
ஈயோசைரன், ஈயோதெரொய்ட்சு மற்றும் மற்றும் புரோடோதெரியம் ஆகியவை கடந்த காலத்தில் காலிதெரினேயின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்திய விலங்கின பகுப்பாய்விற்குப் பின் இந்த வகைகளை திரிசெச்சிடே மற்றும் தூகோனிடே ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட உயிரினக் கிளையின் அடித்தளமாக மீட்டெடுக்கப்பட்டது. மேலும், தூகோனினே மற்றும் கைட்ரோடாமலினே ஆகிய துணைக்குடும்பங்களைப் பொறுத்தமட்டில் கேலிதேரினே பலபிரிவுகள் கொண்டதாகும். மேலும் பெயரின் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும், ஏனெனில் வகை இனமானது கண்டறிதல் இல்லாத பல்லை அடிப்படையாகக் கொண்டது.[7]
Vélez-Juarbe,Jorge;Domning,Daryl P.(2014)."Fossil Sirenia of the West Atlantic and Caribbean region. X. Priscosiren atlantica, sp. nov".Journal of Vertebrate Paleontology34(4): 951.doi:10.1080/02724634.2013.815192.
Vélez-Juarbe,Jorge;Domning,Daryl P.(2015)."Fossil Sirenia of the West Atlantic and Caribbean region. XI. Callistosiren boriquensis, gen. et sp. nov".Journal of Vertebrate Paleontology35: e885034.doi:10.1080/02724634.2014.885034.
Voss,Manja(2014)."On the invalidity of Halitherium schinzii Kaup, 1838 (Mammalia, Sirenia), with comments on systematic consequences".Zoosystematics and Evolution90: 87–93.doi:10.3897/zse.90.7421.
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.