![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f4/Deepa_Mehta.jpg/640px-Deepa_Mehta.jpg&w=640&q=50)
தீபா மேத்தா
இந்திய-கனடியன் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
தீபா மேத்தா (Deepa Mehta), ஜனவரி 1, 1950 இல் பிறந்தவர். இந்திய-கனடியன் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். இவரது "பூதங்களின் முவ்வரிசை" ஃபயர் (1996), எர்த் (1998), மற்றும் வாட்டர்(2005) போன்றப் படங்களின் மூலம் அறியப்படுகிறார்.
தீபா மேத்தா | |
---|---|
![]() 2012 இல் 7 வது ஆண்டு கனடாவின் திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டத்தில் மேத்தா பேசுகிறார் | |
பிறப்பு | சனவரி 1, 1950 (1950-01-01) (அகவை 74) அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா |
இருப்பிடம் | தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா |
தேசியம் | கனடியன் |
பணி | திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளார், திரைப்பட தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1976 முதல் தற்போது வரை |
அறியப்படுவது | "எலிமென்ட் டிரையாலஜி" |
வாழ்க்கைத் துணை | பால் சால்ட்ஸ்மென் (1973–1983)[1] டேவிட் ஹாமில்ட்டன் – தற்போது வரை |
பிள்ளைகள் | தேவ்யானி சால்ட்ஸ்மென், மகள் |
உறவினர்கள் | திலீப் மேத்தா, சகோதரன் |
ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள் வரிசையில் சிறந்த வெளிநாட்டு படத்திற்காக இவரது "எர்த்" படம் அதிகாரபூர்வமாக நுழைந்தது. சிறந்த வெளிநாட்டு படத்திற்காக இவரது "வாட்டர்" திரைப்படத்திற்காக கனடாவில் விருதிற்காக அதிகாரபூர்வமாக நுழைந்தது. "எர்த்" ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் படமாகும்
அவர் 1996 ஆம் ஆண்டில் தனது கணவர் மற்றும் தயாரிப்பாளர் டேவிட் ஹாமில்டனுடன் (கனடிய தயாரிப்பாளர்) இணைந்து ஹாமில்டன்-மேத்தா புரொடக்சன்ஸ் என்பதை துவக்கினார். இவருக்கு 2003 இல் "பாலிவுட் / ஹாலிவுட்" திரைக்கதைகளுக்காக "ஜீனி" விருது வழங்கப்பட்டது. மே 2012 இல், மேத்தா கனடாவின் மிக உயர்ந்த கௌரவமான வாழ்நாள் கலைத்துவ சாதனைக்கான கவர்னர் ஜெனரல் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் விருதைப் பெற்றார்.[2]