திறந்த செங்குத்து வரிசை
From Wikipedia, the free encyclopedia
சதுரங்கத்தில், திறந்த செங்குத்து வரிசை என்பது எந்த நிறச்சிப்பாயும் இல்லாத செங்குத்து வரிசையாகும்.[1] படத்தில் உள்ள e-செங்குத்து வரிசையானது ஒரு திறந்த செங்குத்து வரிசையாகும். திறந்த செங்குத்து வரிசைகள் கோட்டை மற்றும் இராணிக்கு தாக்குதல் செய்ய சிறந்த வழியமைக்கின்றன. எதிராளியைத் தாக்குவது இலகுவாக இருப்பதாலும் எதிராளின் பக்கம் சென்று எதிராளியின் நிலையைத் தகர்க்க முடியும் என்பதாலும் கோட்டை(கள்) மற்றும்/அல்லது இராணி(கள்) திறந்த அல்லது அரை-திறந்த செங்குத்து வரிசைகளில் இருப்பது பயனுடையதாகக் கருதப்படும்.
a | b | c | d | e | f | g | h | ||
8 | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | 8 | |||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
e-செங்குத்து வரிசையில் (புள்ளடிகளால் குறிக்கப்பட்டுள்ளது) உள்ள கோட்டையானது திறந்த செங்குத்து வரிசையொன்றில் உள்ளது ஏனென்றால் அங்கு எந்தச்சிப்பாயும் இல்லை. அந்த வரிசையில் சிப்பாய்களால் தாக்கப்படக்கூடிய இடங்கள் தவிர்ந்த மற்ற இடங்களுக்கு கோட்டையால் செல்லமுடியும்.
இந்தக்கட்டுரை சதுரங்க நகர்த்தல்களை விளக்க இயற்கணித குறிமுறையை பயன்படுத்துகிறது.