![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/Simplified_tamil_script.png/640px-Simplified_tamil_script.png&w=640&q=50)
திருத்திய தமிழ் எழுத்துவடிவம்
From Wikipedia, the free encyclopedia
திருத்திய தமிழரிச்சுவடி அல்லது சீர்திருத்திய தமிழரிச்சுவடி என்பது தமிழ் அரிச்சுவடியின் ஏற்படுத்தப்பட்ட மாற்றமாகும்.
![திருத்திய தமிழ் அசை](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/Simplified_tamil_script.png/640px-Simplified_tamil_script.png)
1978இல் தமிழ்நாடு அரசு தற்போதுள்ள தமிழ் அரிச்சுவடியில் சில அசைகளை அரிச்சுவடியை இலகுபடுத்தும் நோக்குடன் திருத்தியது.[1] அதன் நோக்கம் ஆ, ஓ மற்றும் ஐ அசைகளின் ஒரு அளவிற்குட்படாத அசைகளை அளவிற்குட்படுத்துவதாகும்.[2] இத்திருத்தங்கள் இந்தியாவிலும் எண்மிய உலகிலுமே பரவியது. ஏனைய பகுதிகளான இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு, இரீயுனியன் மற்றும் தமிழ் பேசும் பகுதிகள் பாரம்பரிய அசைகளையே தொடர்ந்து பாவித்தன.
மேலும், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் 15 இல் 13 மட்டுமே வெற்றியளித்தது. முன்மொழியப்பட்ட அய் என்பதற்குப் பதில் ஐ மற்றும் முன்மொழியப்பட்ட அவ் என்பதற்குப் பதில் ஔ ஆகியவற்றை மக்கள் தொடர்ந்து பாவித்தனர்[3]