From Wikipedia, the free encyclopedia
திம்ரோத் மறுசீராக்கல் ( Dimroth rearrangement) என்பது ஒரு கரிம வேதியியல் மறுசீரமைப்பு வினை வகையாகும். இவ்வினையில் 1,2,3-டிரையசோல்களில் மறுசீரமைப்பு வினை நிகழ்கிறது. உட்புற மற்றும் வெளிப்புற நைட்ரசன் அணுக்கள் இவ்வினையில் இடம்பெயர்கின்றன [1]. இக்கரிம வேதியியல் வினை 1909 ஆம் ஆண்டு ஓட்டொ திம்ரோத்தால் கண்டறியப்பட்டது [2][3][4]
பீனைல் தொகுதியுடன் இவ்வினை கொதிக்கும் பிரிடினில் 24 மணி நேரத்திற்கு நிகழ்கிறது [5].
இவ்வகையான டிரையசோலில் 5 ஆவது நிலையிடத்தில் ஓர் அமினோ தொகுதி உள்ளது. டையசோ இடைநிலையாக வளையம் திறக்கப்பட்ட பின்னர், புரோட்டானின் 1,3- இடப்பெயர்ச்சி C-C பிணைப்பு சுழற்சியால் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது.
சிலவகையான 1-ஆல்க்கைல்-2-இமினோபிரிமிடின்களும் இவ்வகையான மறு சீராக்கல் வினையை வெளிப்படுத்துகின்றன.
முதல் படிநிலையில் தண்ணீர் கூட்டு வினை நிகழ்கிறது. தொடர்ந்து எமியமினால் வளையத் திறப்பும், அமினோ ஆல்டிகைடு வளைய மூடலும் தொடர்கின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.