திக்நாகர் (Dignāga) அல்லது திண்ணாகர் (Diṅnāga) யோகாசாரம் எனும் பௌத்த சமயப் பிரிவை முன்மொழிந்த பௌத்த அறிஞர். திண்ணாகர் கி.பி 480 முதல் 540 வரை வாழ்ந்ததாக கருதப்படுபவர். இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் குறைவே. பௌத்த தர்க்கவியலை[1] வடிவமைத்த முன்னோடி என்று அறியப்படும் திண்ணாகர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நகரத்திற்கு அருகில் இருந்த சிம்மவாக்தம் எனும் கிராமத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது.[2] நாகதத்தர் என்ற பௌத்த குருவிடம் சீடராக இருந்து பின்னர் வசுபந்து எனும் பௌத்த குருவிடம் பௌத்த இயலை கற்றவர். இவரது தர்க்கவியல் நூல்களுக்கு தர்மகீர்த்தி பௌத்த அறிஞர் விளக்க உரைகள் எழுதியுள்ளார்.

Thumb
திக்நாகர்

எழுதிய நூல்கள்

  • திண்ணாகரின் முதன்மையான தருக்க நூல் பிரமாண-சமுச்சயம் (Compendium of Valid Cognition), (Apoha).[3]
  • ஏது சக்கரம் (நிகழ்ச்சித் திகிரி), இந்நூல் முறையான பௌத்த தர்க்கவியலை விளக்கும் முதல் நூல்.
  • ஆலம்பன-பரிக்சா, (The Treatise on the Objects of Cognition)
  • அபிதர்மகோச-மர்ம-பிரதீபவசுபந்துவின் அபிதர்மகோச உரை
  • திரிகால-பரிக்சா, (Treatise on the tri-temporality)
  • நியாய-முக்தா (Introduction to logic).

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.