தாவரங்களின் உயிரியல் வகைப்பாடு
From Wikipedia, the free encyclopedia
தாவரங்களின் உயிரியல் வகைபாடு என்பது பண்டைய கிரேக்க அறிஞர்கள் முதல் நவீன பரிணாம உயிரியலாளர்கள் வரை துறை அறிஞர்களால் கூறப்பட்டுள்ள தாவரங்களின் உயிரியல் வகைப்பாடாகும். பரிணாமக் கோட்பாட்டின் வருகை வரை , கிட்டத்தட்ட அனைத்து வகைப்பாடுகளும் அனைத்து உயிர்களின் சங்கிலி படிநிலை கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு இயற்கை அறிவியல் மற்றும் இயற்கை இறையியல் மூலமாகவே தாவரங்களின் வகைபாடு மற்றும் அதற்கான விளக்கங்கள் அமைக்கப்பட்டன. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் தாவரவியலின் தொழில்முறைமயமாக்கல், முழுமையான வகைப்பாடு முறைகளை நோக்கிய மாற்றத்தைக் கொண்டு, தற்போது பரிணாமக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.