![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8f/Thomas_Hunt_Morgan.jpg/640px-Thomas_Hunt_Morgan.jpg&w=640&q=50)
தாமஸ் ஹண்ட் மோர்கன்
From Wikipedia, the free encyclopedia
தாமஸ் ஹன்ட் மோர்கன் (Thomas Hunt Morgan, செப்டம்பர் 25, 1866 - டிசம்பர் 4, 1945)[1] ஓர் அமெரிக்க பரிணாம உயிரியல், மரபியலர், முளையவியலாளர், மற்றும் அறிவியல் எழுத்தாளரான இவர் 1933 ஆம் ஆண்டில் உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.[2]
தாமசு ஹண்ட் மோர்கன் Thomas Hunt Morgan | |
---|---|
![]() | |
பிறப்பு | (1866-09-25)செப்டம்பர் 25, 1866 லெக்சிங்டன், கென்டக்கி |
இறப்பு | திசம்பர் 4, 1945(1945-12-04) (அகவை 79) பாசடீனா, கலிபோர்னியா |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கர் |
துறை | |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் | |
முனைவர் பட்ட மாணவர்கள் |
|
விருதுகள் |
|
கையொப்பம் |
மோர்கன் தனது 1890 ஆம் ஆண்டில் விலங்கியல் துறையில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.1900 ஆம் ஆண்டில் மெண்டலின் விதிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோர்கன் பழ ஈக்களின் டிரோசோபிலா மெலனோகாஸ்டரின் மரபணு பண்புகளை ஆய்வு செய்யத் தொடங்கினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில், மோர்கன் மரபணுக்கள் நிறப்புரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன என்பதை நிரூபித்தார்.
மோர்கன் தனது வாழ்க்கையில் 22 நூல்களையும் 370 அறிவியல் ஆவணங்களையும் எழுதினார். [1] கலிஃபோர்னியா தொழில் நுட்பக் கழகத்தில் அவர் நிறுவிய உயிரியல் பிரிவுகளில் பயின்ற ஏழு மாணவர்கள் நோபல் பரிசு வென்றுள்ளனர்..