From Wikipedia, the free encyclopedia
தான் செட்சுமன் (Dan Shechtman, எபிரேயம்: דן שכטמן), பிறப்பு: சனவரி 24, 1941, தெல் அவீவ், இசுரேல்), தெக்னியான் (Technion) எனப்படும் இசுரேலியத் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் பொருளறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். இவர் 2011 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை வென்றார். இவர் கண்டுபிடித்த வியப்பூட்டும் அரை படிகத்திற்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது[1]. இவர் ஐயோவா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக உள்ளார். அமெரிக்க அரசின் ஆற்றல்சார் துறையைச் சேர்ந்த ஏம்சு ஆய்வுகூடத்தில் (Ames Laboratory) இணையாய்வராகவும் (Associate) உள்ளார். 1982 இல் தொடங்கிய நெடுவிடுப்பில், அமெரிக்காவில் உள்ள சீர்தரத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமான நாட்டக உயர்நுட்பகத்தில் (National Institute of Standards and Technology) பணியாற்றிய பொழுது 1984 இல், இருபதுமுக முக்கோணக வடிவநிலையை (icosahedral phase) என்பதைக் கண்டுபிடித்தார், இதுவே பின்னர் சிரொன்றா ஆனால் சீரானதுபோல் தோற்றம் அளிக்கும் அடுக்கு முறை கொண்ட படிகத்தைக் கண்டுபிடித்தார்.[2].
தான் செட்சுமன் Dan Shechtman | |
---|---|
பிறப்பு | சனவரி 24, 1941 தெல் அவீவ், இசுரேல் |
வாழிடம் | இசுரேல் |
குடியுரிமை | இசுரேல் |
துறை | பொருளறிவியல் |
பணியிடங்கள் | ரைட் பேட்டர்ன் வான்படைத் தளம் சான் ஆப்கின்சு பல்கலைக்கழகம் NIST ஐயோவா மாநிலப் பல்கலைக்கழகம் தெக்னியான் - இசுரேல் தொழில்நுட்பக் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | தெக்னியான் - இசுரேல் தொழில்நுட்பக் கழகம் |
அறியப்படுவது | சீரொன்றாப் படிகம் (Quasicrystals) |
விருதுகள் | இயற்பியலுக்கான உவுல்ஃவ் பரிசு (1998) இசுரேல் பரிசு (1999) வேதியியலுக்கான நோபல் பரிசு (2011) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.