From Wikipedia, the free encyclopedia
நடு அமைதிப் பெருங்கடலின் பவளத் தீவுகளில் ஒன்றான தரவா (Tarawa) கிரிபட்டி குடியரசின் தலைநகரமாகவும் விளங்குகின்றது.[1][2][3] இது வடக்குத் தரவா என்றும் தெற்குத் தரவா என்றும் பிரிக்கப்பட்டுள்ளது; வடக்குத் தரவாவில் கில்பெர்ட் தீவுகளில் பல தொலைதூரத் தீவுகள் அடங்கியுள்ளன. தெற்குத் தரவாவில் நாட்டின் மக்கள்தொகையில் பாதியாக 50,182 as of 2010[update] பேர் வசிக்கின்றனர்.[4][5] வெளிநாட்டு மக்களுக்கு இரண்டாம் உலகப் போரின் போது இங்கு நிகழ்ந்த தரவா சண்டையால் இப்பவளத்தீவு அறிமுகமானது.
தரவா பவளத்தீவில் தெற்குத் தரவா (சிவப்பு) வடக்குத் தரவா (மஞ்சள்) காட்டப்பட்டுள்ள நிலப்படம் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | அமைதிப் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 1°26′N 173°00′E |
தீவுக்கூட்டம் | கில்பெர்ட் தீவுகள் |
பரப்பளவு | 500 km2 (190 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 3 m (10 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 56,284 (2010) |
தரவாவில் 500 கிமீ2 பரப்புள்ள கடற்காயலும் அகலமான கடலடிப் பாறையும் உள்ளது. அனைத்துவிதமான மீன்களும் ஓடுடைமீன்களும் இயற்கையாகவே கிடைத்தாலும் வளர்ந்து வரும் பெரும் மக்கள்தொகையால் கடல்சார் வளங்கள் மிக அதிகயளவில் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. அடிக்கடி வறட்சி ஏற்பட்டாலும் சாதாரண ஆண்டுகளில் பெய்யும் மழை ஈரப்பலா, பப்பாளி, வாழை மரங்களையும் தென்னை, தாழை மரங்களையும் வளர்க்கப் போதுமானதாக உள்ளது.
வடக்குத் தரவாவில் பல தொடர்ச்சியான தீவுத்திட்டைகள் அடங்கியுள்ளன; இவற்றில் மிகவும் வடக்கில் புராரிகி தீவுத்திட்டை உள்ளது. இந்தத் தீவுத்திட்டைகளிடையே உள்ள பரந்த கடல்வெளிகளை குறைந்த அலையோதம் இருக்கும் போது கடப்பது எளிதாகும்.[6]
தெற்குத் தரவாவில் பாலங்கள் கட்டப்பட்டு, மேற்கிலுள்ள பெதியோ தீவுத்திட்டை முதல் வடகிழக்கிலுள்ள புயோடா தீவுத்திட்டை வரை, ஒரே நிலப்பட்டையாக உள்ளது.[7]
தரவா பவளத்தீவில் மூன்று நிர்வாக பிரிவுகள் உள்ளன:
அம்போவில் சட்டப் பேரவையும் பைரிக்கியில் அரசு மாளிகையும் உள்ளன. கிரிபாட்டி அரசின் வெவ்வேறு அமைச்சகங்களும் பெடியோ முதல் தெற்கு நவேரவேர் வரையிலும் அமைந்துள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.