தயூப்
From Wikipedia, the free encyclopedia
தயூப் (Taif), சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தின், தயூப் ஆளுநரகத்தில் உள்ள நகரம் ஆகும்.[1] இது ஹெஜாஸ் மலையில் 1,879 m (6,165 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[2]2020ம் ஆண்டில் தயூப் நகரத்தின் மக்கள் தொகை 6,88,693 எனக்கணக்கிடப்பட்டுள்ளது. இது சவூதி அரேபியாவின் 6வது பெரிய நகரம் ஆகும்.[3]இந்நகரம் பானு தகிப் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்நகரை சவூதி இராச்சியத்தின் கோடைக்காலத் தலைநகராக அழைக்கப்படுகிறது.[4][5] மேலும் இந்நகரம் ஹெஜாஸ் மலைத்தொடரில் 1,879 மீட்டர் இருப்பதால், சவூதி அரேபியாவின் கோடைக்கால மலை வாழிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[6] இந்நகரம் சவூதி அரேபியாவின் பழத்தோட்டங்களுக்கும், ரோஜாப் பூத்தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.[7]
விரைவான உண்மைகள் தயூப் ٱلطَّائِف, நாடு ...
தயூப்
ٱلطَّائِف | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): ரோஜாப் பூக்களின் நகரம், சவூதி அரேபியா இராச்சியத்தின் கோடைக்காலத் தலைநகரம் | |
ஆள்கூறுகள்: 21°16′30.34″N 40°24′22.16″E | |
நாடு | சவூதி அரேபியா |
மாகாணம் | மக்கா |
ஆளுநரகம் | தயூப் |
அரசு | |
• மேயர் | நஹர் அல்சவுத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 321 km2 (124 sq mi) |
ஏற்றம் | 1,879 m (6,165 ft) |
மக்கள்தொகை | |
• மதிப்பீடு (2020) | 6,88,693 |
• தரவரிசை | 6 |
• அடர்த்தி | 2,145/km2 (5,554/sq mi) |
நேர வலயம் | ஒசநே+3 (அரேபிய சீர் நேரம்) |
அஞ்சல் எண் | 26XXX |
இடக் குறியீடு | +966 12 |
இணையதளம் | http://www.taifcity.gov.sa |
மூடு