![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/48/Thangassseri_Lighthouse.jpg/640px-Thangassseri_Lighthouse.jpg&w=640&q=50)
தங்கசேரி கலங்கரை விளக்கம்
From Wikipedia, the free encyclopedia
தங்கசேரி கலங்கரை விளக்கம் (Tangasseri Lighthouse) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் பெருநகரப் பகுதியில் தங்கசேரியில் அமைந்துள்ள இரண்டு கலங்கரை விளக்கங்களுள் ஒன்றாகும். கொல்லம் மாநகராட்சி மற்றும் கொல்லம் கலங்கரை விளக்கப் பொது இயக்ககம் தங்கசேரி கலங்கரை விளக்கத்தைப் பராமரிக்கிறது[4][5]. 41 மீட்டர் உயரத்துடன் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் சாய்ந்த பட்டைகள் வரையப்பட்ட உருளையான இக் கோபுரம் 1902 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது[6]. கேரள கடற்கரையில் அமைந்துள்ள இரண்டாவது மிக உயர்ந்த கலங்கரை விளக்கமாகவும்[7] கேரளாவில் அதிகமாகப் பார்வையிடப்பட்ட கலங்கரை விளக்கமாகவும் இது கருதப்படுகிறது[8].
விரைவான உண்மைகள் அமைவிடம், ஆள்கூற்று ...
![]() தங்கசேரி கலங்கரை விளக்கம் | |
கேரளாவில் அமைவிடம் | |
அமைவிடம் | தங்கசேரி, கொல்லம், இந்தியா |
---|---|
ஆள்கூற்று | 8.880691°N 76.565955°E / 8.880691; 76.565955 |
கட்டப்பட்டது | 1902 |
அடித்தளம் | பைஞ்சுதை |
கட்டுமானம் | கொத்துவேலை கோபுரம் |
உயரம் | 41 மீட்டர்கள் (135 அடி)[1] |
குவிய உயரம் | 42 மீட்டர்கள் (138 அடி) கடல்மட்டத்திற்கு மேல் |
ஆரம்ப வில்லை | 700 மி.மீ 2 ஆம் நிலை 3 சுழலும் கதவு கண்ணாடி உட்புறம் 3.65 விட்டம் கலங்கரை விளக்கம் |
செறிவு | 1,27,950 CDS (220/250 வோல்ட்) ஏ.சி 400வோல்ட் X 3 எண்கள். |
வீச்சு | 26 கடல் மைல்கள் (48 km; 30 mi) |
சிறப்பியல்புகள் | எப்1 (3) டபிள்யு 15 கள். |
Admiralty எண் | எப்0720 |
NGA எண் | 27504[2] |
ARLHS எண் | இந்தியா-109[3] |
மூடு