![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Tekeze_reservoir.jpg/640px-Tekeze_reservoir.jpg&w=640&q=50)
தக்கீசு அணை
From Wikipedia, the free encyclopedia
தக்கீசு அணை (Tekeze Dam) என்பது எத்தியோப்பியாவின் வட திக்ரே மாகாணத்திலுள்ள வளைவு அணையாகும். இது நைல் ஆற்றின் துணை ஆறாகிய ஆழமான பள்ளத்தாக்குகள் வழியே பாயும் தக்கீசு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 2009 பிப்ரவரி மாதம் பயன்பாட்டு வந்த 188 மீட்டர் உயரம் உடைய இவ்வணையே ஆப்பிரிக்காவின் உயரமான அணையாகும்.[1] இதற்கு முன்பு 185 மீட்டர் உயரமுடைய லெசோத்தோ நாட்டு கட்சே வளைவு அணையே ஆப்பிரிக்காவின் உயரமான அணையாக இருந்தது. தொடக்கத்தில் 224 மில்லியன் அமெரிக்க டாலரில் கட்டி முடிக்கப்படத் திட்டமிட்டிருந்த இவ்வணை பல்வேறு காரணங்களால் இறுதி செலவு 350மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் ஆனது.[2][3]இது சீன ஒத்துழைப்புடன் கட்டப்பட்ட அணையாகும்.
தக்கீசு அணை | |
---|---|
![]() தக்கீசு அணை | |
அதிகாரபூர்வ பெயர் | Tekeze Dam |
நாடு | எத்தியோப்பியா |
அமைவிடம் | எத்தியோப்பியா |
புவியியல் ஆள்கூற்று | 13°20′40″N 38°44′43″E |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | 1999 |
திறந்தது | பிப்ரவரி 2009 |
கட்ட ஆன செலவு | $360 மில்லியன் |
உரிமையாளர்(கள்) | எத்தியோப்பியா அரசாங்கம் |
அணையும் வழிகாலும் | |
வகை | வளைவு அணை |
தடுக்கப்படும் ஆறு | தக்கீசு ஆறு |
உயரம் | 607 அடி (185 m) |
நீளம் | 2,329 அடி (710 m) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 9.0 km3 (7,300,000 acre⋅ft) |
மின் நிலையம் | |
சுழலிகள் | 4 x 75 மெகாவாட் (101,000 குதிரை திறன்) |
நிறுவப்பட்ட திறன் | 300 மெகாவாட் (400,000 குதிரை திறன்) |
இதுவே எத்தியோப்பியாவின் பொதுப்பணித்துறை செயல்படுத்திய பெரிய திட்டமாகும். இதிலிருந்து 300 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக நான்கு 75 மெகாவாட் டர்பைன்கள் பயன்படுத்தப்படுகின்றன[4]