டோமஹாக் (ஏவுகணை)
From Wikipedia, the free encyclopedia
டோமஹாக் என்பது ஐக்கிய அமெரிக்க கடற்படை மற்றும் அரச கடற்படை பயன்படுத்தும் தரையில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணை ஆகும்.
இது 1970களில் முதன் முதலாக ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.[1] தற்போது ரேய்தியோன் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது.[2] 2016ஆம் ஆண்டு அமெரிக்க கப்பற்படை 149 ஏவுகணைகளை ஐஅ$202.3 மில்லியன் (₹1,446.8 கோடி)க்கு வாங்கியது. சமீபத்தில் 2018ஆம் ஆண்டு அமெரிக்க கப்பற்படை சிரிய வேதியியல் ஆயுத அமைப்புகளுக்கு எதிராக 66 ஏவுகணைகளை ஏவியது.[3]
- டோமஹாக் ஏவுகணை செலுத்தப்படுதல்
- யுஎஸ்எஸ் மிசோரி போர்க்கப்பலில் இருந்து செலுத்தப்படும் டோமஹாக் ஏவுகணை
- யுஎஸ்எஸ் புளோரிடா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தப்படுதல்
- கப்பலில் இருந்து பறக்கும் ஏவுகணையின் வழி