டைதயோல்
இரண்டு தயோல் வேதிவினைக்குழுக்களைக் கொண்டுள்ள கரிமக் கந்தகச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
டைதயோல் (Dithiol) என்பது இரண்டு தயோல் வேதி வினைக்குழுக்களைப் பெற்றுள்ள ஒரு கரிமகந்தக சேர்மமாகும். கரைதிறன், நெடி, ஆவியாதல் போன்ற இயற்பியல் பண்புகளில் மோனோதயோலின்களின் பண்புகளுடன் டைதயோலின் பண்புகளும் ஒத்துள்ளன. ஒரு கரிமச் சேர்மத்தில் இரண்டு தயோல் குழுக்களும் அவை இடம்பெற்றுள்ள இடத்தைப் பொறுத்து வெவ்வேறு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன.