டைக்குவாண்டோ
டேக்வாண்டோ / From Wikipedia, the free encyclopedia
டைக்குவாண்டோ (Tae Kwon Do) என்பது கொரியாவில் அறிமுகமான ஒரு தற்காப்புக்கலை ஆகும். இக்கலை இப்போது உலகின் பல நாடுகளிலும் பரவலாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காவற்துறை மற்றும் இராணுவத்தினரால் பயிற்சி செய்யப்படுகிறது. தென் கொரியாவில் இக்கலை ஒரு தேசிய விளையாட்டாகும். ஒலிம்பிக் போட்டிகளிலும் இது விளையாடப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வேறு பெயர் | டைக்குவான்-டோ, டை குவான்-டோ, டை குவான் டோ |
---|---|
நோக்கம் | தாக்குதல் |
தோன்றிய நாடு | கொரியா |
ஒலிம்பிய விளையாட்டு | 2000 ஆம் ஆண்டில் இருந்து |
Official website | http://wtf.org/ |
கொரிய மொழியில் Tae (跆) என்பது உதை எனவும் Kwon (拳) என்பது கைகாளால் தாக்குதல் எனவும் Do என்பது (道) கலை எனவும் பொருள்படும். அதாவது கால், கை இவற்றால் எதிரியைத் தாக்கிச் செயலிழக்கச் செய்யும் கலை எனப் பொதுவாகக் கூறலாம். ஏனைய தற்காப்புக் கலைகள் போல் இதுவும் எதிரியை அடக்க, தற்பாதுகாப்புக்காக, விளையாட்டாக, உடற்பயிற்சிக்காக மற்றும் களியாட்டம் என்று பல வகைகளிலும் இது பயன்பாட்டில் உள்ளது.
டைக்குவாண்டோ கலையில் கால்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இக்கலையில் குறிப்பிட்ட வல்லுநர் எதிரி தன்னை நெருங்கும் போது கால்களைப் பயன்படுத்தி எதிரியைத் தூரத்திலேயே நிறுத்தி வைத்துத் தாக்கிச் செயலிழக்கச் செய்வார்.