![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/24/Pulitzer2018-danish-siddiqui-20180530-wp.jpg/640px-Pulitzer2018-danish-siddiqui-20180530-wp.jpg&w=640&q=50)
டேனிஷ் சித்திக்கி
இந்திய ஒளிப்பட பத்திரிக்கையாளர் / From Wikipedia, the free encyclopedia
டேனிஷ் சித்திக்கி (Danish Siddiqui, 19 மே 1983 - 15 சூலை 2021 [1] ) என்பவர் மும்பையைச் சேர்ந்த ஒரு இந்திய ஒளிப்பட பத்திரிகையாளர் ஆவார். இவர் தேசிய ராய்ட்டர்ஸ் மல்டிமீடியா அணியின் தலைவராக இருந்தார்.[3][4][5][6] ரோகிங்கியா அகதிகளின் நெருக்கடியை ஆவணப்படுத்தியதற்காக, ராய்ட்டர்ஸ் குழுவின் ஒரு பகுதியாக, தோற்ற ஒளிப்படத்திற்கான 2018 புலிட்சர் பரிசைப் பெற்றார்.
விரைவான உண்மைகள் டேனிஷ் சித்திக்கி, பிறப்பு ...
டேனிஷ் சித்திக்கி | |
---|---|
![]() 2018 இல் சித்திக்கி | |
பிறப்பு | 19 மே 1983 புது தில்லி[1] |
இறப்பு | 15 சூலை 2021(2021-07-15) (அகவை 38) ஆப்கானித்தானம் |
இறப்பிற்கான காரணம் | துப்பாக்கி குண்டு காயம் |
கல்லறை | ஜாமியா மில்லியா இஸ்லாமியா cemetery[2] |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஜாமியா மில்லியா இஸ்லாமியா |
பணி | துப்பாக்கி குண்டு காயம் |
பணியகம் | ராய்ட்டர்ஸ் |
வாழ்க்கைத் துணை | ரைக் |
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
www |
மூடு
2021 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் தாலிபான் படைகளுக்கும் இடையிலான மோதலில் பாகிஸ்தானுடனான எல்லை அருகே மறைத்து இருந்தபோது இவர் சுடுக் கொல்லப்பட்டார்.[7][8][9]