From Wikipedia, the free encyclopedia
டெல்டா 4000 தொடர் (Delta 4000 series) என்பவை அமெரிக்காவைச் சேர்ந்த எரிந்தழியும் ஏவூகல அமைப்பு வகை ஏவூர்திகளாகும். இந்த ஏவூர்திகளைப் பயன்படுத்தி 1989 மற்றும் 1990 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இரண்டு சுற்றுப்பாதை ஏவுதல்கள் நடைபெற்றன. டெல்டா குடும்ப வகை ஏவூர்திகளில் டெல்டா 4000 ஏவூர்தியும் ஒன்றாகும். டெல்டா 4000 தொடரில் பல்வேறு மாறுபாடுகள் கொண்ட ஏவூர்திகள் முன்வைக்கப்பட்டாலும் டெல்டா 4925 மட்டுமே ஏவப்பட்டது. நான்கு இலக்க எண் குறியீட்டைப் பயன்படுத்தி இவ்வகையின் மாறுபட்ட வகைகள் வேறுபடுத்தி அறியப்படுகின்றன. முன்னதாகப் பயன்படுத்தப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட டெல்டா குடும்ப ஏவூர்தி மற்றும் அப்போதுதான் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்த டெல்டா II 6000 தொடர் ஏவூர்திகளின் உதிரி பாகங்கள் டெல்டா 4000 ஏவூர்தியை வடிவமைக்க உபயோகப்படுத்தப்பட்டன.
டெல்டா 4000 தொடர் Delta 4000 series | |
டெல்டா 4925 ஏவுதல் | |
தரவுகள் | |
---|---|
இயக்கம் | எரிந்தழியும் ஏவூகல அமைப்பு |
அமைப்பு | {{{manufacturer}}} |
நாடு | ஐக்கிய அமெரிக்கா
|
ஏவு வரலாறு | |
நிலை | நிறுத்தப்பட்டது |
ஏவல் பகுதி | கேனவரால் ஏ.வ-17பி |
மொத்த ஏவல்கள் | 2 |
வெற்றிகள் | 2 |
முதல் பயணம் | 28 ஆகத்து 1989 |
கடைசிப் பயணம் | 12 சூன் 1990 |
எம்பி-3-III இயக்கும் தோர் ஏவுகணையின் நீட்சிவடிவ நீள் தொட்டி தோர் அமைப்பே, டெல்டா தொடரின் முதற்கட்டம் ஆகும். முன்னதாக இது டெல்டா 1000 தொடராக பறந்தது. மேலேற்றும் உந்துகைச் சக்தியை அதிகரிக்கும் விதமாக, டெல்டா 3000 தொடரில் பயன்படுத்திய சக்திவாய்ந்த காசுடர்-4 ஆற்றல் நிரப்பிகளை நீக்கப்பட்டன. அவற்றிற்குப் பதிலாக திண்ம ஏவூர்தி உந்துகலங்களான காசுடர்-4ஏ ஆற்றல் நிரப்பிகள் 9 எண்ணிக்கையில் டெல்டா 4000 உடன் இணைக்கப்பட்டன. டெல்டா-கே வகை இரண்டாம் கட்டமாகப் பயன்படுத்தப்பட்டது. கலச்சுமையை புவியிணக்க இடைப்பாதையில் உயர்த்தித் தள்ள , சிடார்-48பி பொறி வகை கலச்சுமை உதவிப் பெட்டகம் மூன்றாவது கட்டமாகப் பயன்படுத்தப்பட்டது.
கேப் கேனவராலில் உள்ள 17பி ஏவுவளாகத்தில் இருந்தே டெல்டா 4000 இன் இரண்டு ஏவுதல்களும் நிகழ்ந்தன. முதல் ஏவுதலின் போது பிரித்தானியாவின், பிரித்தானிய வான் ஒளிபரப்புக்காக மார்கோ போலோ 1 ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்காக இரண்டாவது ஏவுதல் நிகழ்த்தப்பட்டது. இந்த ஏவுதலின் போது இந்திய தேசிய செயற்கைக்கோள் 1டி விண்ணில் ஏவப்பட்டது. இவ்விரண்டு நிகழ்வுகளும் வெற்றியில் முடிந்தன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.