டெயிட் தேசியப் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
டெயிட் தேசியப் பூங்கா (எசுப்பானியம்: Parque Nacional del Teide) என்பது எசுப்பானியாவின் கேனரி தீவுகளில் அமைந்திருக்கும் தேசியப் பூங்காவாகும். இது 3,718 மீட்டர் உயரம் கொண்ட டெயிட் மலையை மையப்படுத்தி அமைந்துள்ளது. இந்த மலை எசுப்பானியாவின் மிக உயர்ந்த பகுதியும், அத்திலாந்திக் தீவுகளில் கடல் மட்டத்துக்கு மேலே மிக உயர்ந்த புள்ளியும், மற்றும் உலகின் மூன்றாவது உயரமான எரிமலையும் ஆகும். இது தேசியப்பூங்காவாக 22 சனவரி 1954 பிரகடனப்பட்டதால், எசுப்பானியாவின் பழமை வாய்ந்த தேசியப் பூங்காக்களில் ஒன்றாக உள்ளது. இது எசுப்பனியாவின் மிகப்பெரிய தேசியப்பூங்காவாக உள்ளது மட்டுமல்லாது கேனரி தீவுகளின் முக்கிய பகுதியாகவும் உள்ளது. இந்தப் பூங்காவில் டெயிட் எரிமலைக்கு அடுத்ததாக என்னொரு எரிமலையான பிகோ விஜோ அமைந்துள்ளது. இது கேனரி தீவுகளின் இரண்டாவது பெரிய எரிமலையாகும். இதன் உயரம் 3,135 மீட்டர்.
டெயிட் தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | டேநெரைப், எசுப்பானியா |
பரப்பளவு | 189.9 km² |
நிறுவப்பட்டது | 1954 |
வருகையாளர்கள் | வருடத்திற்கு 3,5 மில்லியன் பார்வையாளர்கள் |
வகை | இயற்கை |
வரன்முறை | vii, viii |
தெரியப்பட்டது | 2007 (31ஆவது உலக பாரம்பரியக் குழு) |
உசாவு எண் | 1258 |
State Party | எசுப்பானியா |
Region | ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா |
இந்தப் பூங்கா 18,990 எக்டேர் பரப்பளவைக் கொண்டதுடன் உலகப் பாரம்பரியக் களமாக [ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் சூன் 29, 2007 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது.
டெயிட் தேசியப்பூங்காவே எசுப்பானியாவில் அதிகம் மக்களால் பார்வையிடப்பட்ட பூங்காவாகும். இன்சுடிடுடோ கனறியோ டி எச்டடிச்டிகா (Instituto Canario de Estadística (ISTAC)) இன் படி மொத்தமாக 2.8 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும் இது உலகின் பலர் பார்வையிட்ட தேசியப் பூங்காக்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.[1][2] டெயிட், கேனறித் தீவுகளின் மிகவும் பிரபலமான இயற்கை அம்சமாகும்.