டென்னிசு
From Wikipedia, the free encyclopedia
டென்னிசு (ரென்னிஸ், தட்டுப்பந்து, வரிப்பந்தாட்டம்) என்பது, எதிரெதிராக இருவரோ, அல்லது எதிரெதிராக அணிக்கு இருவராக மொத்தம் நால்வரோ சேர்ந்து, சல்லடை மட்டையால் (ராக்கெட்டு) பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி, அரங்கத்துக்குள் விழுமாறு பந்தைத் தட்டியாடும் ஒரு விளையாட்டு. இவ்விளையாட்டு தொடக்க காலத்தில் கைகளால் தட்டி விளையாடப்பட்டது. பின்னர் பிரான்சு நாட்டினர் டென்னிசு மட்டையை அறிமுகப்படுத்தினர். டென்னிசு என்பது பிரான்சு சொல்லாகும். இவ்விளையாட்டை உள்ளரங்கத்திலும், வெளியிலும் ஆடலாம். டென்னிசு, உலகில் மிக அதிக இரசிகர்களையும் வீரர்களையும் உடைய விளையாட்டுகளில் ஒன்றாகும். அக்காலத்தில் இது புல்வெளி டென்னிஸ் என்ற பெயரோடு 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரபலமடைந்தது. இவ்விளையாட்டுக்கான விதிமுறைகள் மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் 1875 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது.
விம்பிள்டன் | |
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு | சர்வதேச டென்னிசு பெடரேசன் |
---|---|
முதலில் விளையாடியது | 1859–1865 இடையில் இங்கிலாந்தில் |
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் | |
தொடர்பு | No |
அணி உறுப்பினர்கள் | ஒற்றையர் மற்றும் இரட்டையர் |
இருபாலரும் | ஆம்,தனிப்பட்ட போட்டிகள் மற்றும் கலப்பு இரட்டையர் |
பகுப்பு/வகை | சல்லடை மட்டை விளையாட்டு |
கருவிகள் | டென்னிசு பந்து, டென்னிசு ரெக்கெட் |
விளையாடுமிடம் | உள்ளரங்க மற்றும் வெளியரங்க ஆடுதளம் |
தற்போதைய நிலை | |
தாயகம் | உலகம் முழுவதும் |
ஒலிம்பிக் | 1896 முதல் 1924 வரை கோடைகால ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாகவும், 1968 மற்றும் 1984 ஆண்டுகளில் காட்சிவிளையாட்டாகவும், 1988 முதல் வரை கோடைகால ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறது. |
இணை ஒலிம்பிக் | 1992 முதல்ஊனமுற்றோருக்கான கோடைகால ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறது. |
டென்னிஸ் விதிகள் 1890 களின் பின்னர் சிறிதளவே மாற்றமடைந்துள்ளது. எனினும் 1908 முதல் 1961 வரையிலான காலகட்டத்தில் பந்தை முதலில் வழங்குபவர் எல்லா நேரங்களிலும் தரையில் ஒரு காலை வைக்க வேண்டும் என்று ஒரு விதி இருந்தது மற்றும் 1970 களில் சமநிலை முறிவு விதியின் அறிமுகம் ஆகியவை குறிப்பிட தக்க மாறுதல்கலாகும். தற்போது தொழில்முறை டென்னிஸ் மின்னணு ஆய்வு தொழில்நுட்பத்தின் மூலம் சமீபத்தில் ஒரு வீரர் ஒரு புள்ளி சவால் முறை இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு வீரர் கோரும் மறு ஆய்வு சரியாக இருக்கும் பட்சத்தில் அவரின் புள்ளியில் மாறுதல் இருக்காது. ஆனால் அவர் தவறாக இருக்கும் பட்சத்தில் ஒரு புள்ளி குறைக்கப்படும். மேலும் இது ஒரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.