From Wikipedia, the free encyclopedia
டீன் மார்டின் என்பவர் ஒரு அமெரிக்கத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ரியோ பிராவோ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அமெரிக்காவின் ஒகாயோ மாகாணத்தில் சூன் 7, 1917 அன்று பிறந்தார்.[1][2] இவர் இத்தாலிய மூதாதையர்களைக் கொண்டிருந்தார். "த கிங் ஆப் கூல்" (The King of Cool) என்று அழைக்கப்பட்டார்.
இவர் டினோ பால் குரோசெட்டி என்ற இயற்பெயருடன் அமெரிக்காவின் ஒகாயோ மாகாணத்தில் பிறந்தார். இவாது தந்தை முடிதிருத்துபவர் ஆவார். இவரது தாய்மொழி இத்தாலிய மொழி ஆகும். ஐந்து வயதுக்குப் பின்னரே இவர் ஆங்கிலம் பேச ஆரம்பித்தார்.
மார்டினுக்கு புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டது. செப்டம்பர் 1993ஆம் ஆண்டு ஆயுளை நீட்டிக்க அறுவை சிகிச்சை தேவைப்படும் என்று மருத்துவமனை கூறியபோது மார்டின் அதற்கு மறுத்துவிட்டார். 1995ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பொதுவாழ்க்கையில் இருந்து மார்டின் விலகினார். 1995ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று 78 வயதில் இறந்தார். தன் தாய் இறந்து 29 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாள் கிட்டத்தட்ட அதே நேரத்திற்கு இவரும் இறந்தார்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.