![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8a/Trump_Tower_%25287181836700%2529_%2528cropped%2529.jpg/640px-Trump_Tower_%25287181836700%2529_%2528cropped%2529.jpg&w=640&q=50)
டிரம்ப் கோபுரம்
From Wikipedia, the free encyclopedia
டிரம்ப் கோபுரம் (Trump Tower) என்பது, 58 தளங்களைக் கொண்டதும், 664 அடிகள் உயரமானதுமான ஒரு கலப்புப் பயன்பாட்டு வானளாவி ஆகும். இது, நியூயார்க் நகரத்தின் மிட்டவுன் மான்ஹட்டனில், 721-725 ஐந்தாம் அவெனியூவில், 56 ஆம் 57 ஆம் வீதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. டிரம்ப் கோபுரம், "தி டிரம்ப் ஆர்கனைசேசன்" என்னும் நிறுவனத்தின் தலைமையிடமாகச் செயற்படுகிறது. அத்துடன், இக்கோபுரம் உருவாக்கப்பட்டபோது, அதன் உடமையாளரும், வணிகரும், நிலஞ்சார் சொத்து மேம்பாட்டாளருமான, ஐக்கிய அமெரிக்க சனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூட்டுரிமைக் கட்டிட உச்சி வீடும் இக்கட்டிடத்தில் உள்ளது. டிரம்ப் குடும்பத்தைச் சேர்ந்த பலர் இக்கட்டிடத்தில் வசிக்கின்றனர் அல்லது முன்னர் வசித்துள்ளனர். "பொன்விட் டெல்லர்" என்னும் பல்பொருள் அங்காடி நிறுவனத்தின் சிறப்பு அங்காடி ஒன்று முன்னர் இருந்த நிலத்திலேயே இக்கோபுரம் அமைக்கப்பட்டது.
டிரம்ப் கோபுரம் | |
---|---|
![]() ஐந்தாம் அவெனியூவில் இருந்து தோற்றம் | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | நிறைவுற்றது |
வகை | சில்லறை வணிகம், அலுவலகம், குடியிருப்பு |
இடம் | 721 ஐந்தாம் அவெனியூ நியூயார்க் நகரம், நியூயார்க் 10022 ஐக்கிய அமெரிக்கா |
ஆள்கூற்று | 40.7625°N 73.9738°W / 40.7625; -73.9738 |
கட்டுமான ஆரம்பம் | 1979 |
நிறைவுற்றது | 1983 |
திறப்பு | நவம்பர் 30, 1983; 40 ஆண்டுகள் முன்னர் (1983-11-30) |
உரிமையாளர் | டொனால்ட் டிரம்ப், தி டிரம்ப் ஆர்கனைசேசன் |
மேலாண்மை | தி டிரம்ப் ஆர்கனைசேசன் |
உயரம் | |
கட்டிடக்கலை | 664 அடி (202 m)[1] |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 58 உண்மையான தளங்கள்; உச்சத் தளம் 68 என எண்ணிடப்பட்டுள்ளது[2] |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | டேர் இசுக்கட்; பூர், சுவாங்கே, ஹேடன் & கோனெல் |
மேம்பாட்டாளர் | டொனால்ட் டிரம்ப் |
அமைப்புப் பொறியாளர் | இர்வின் கான்டர் |
பூர், சுவாங்கே, ஹேடன் அன்ட் கோனெல் நிறுவனத்தைச் சேர்ந்த டேர் இசுக்கட் (Der Scutt) என்பவர் இதை வடிவமைத்தார். டிரம்பும், "ஈகுயிட்டபிள் இன்சூரன்சு கம்பனி"யும் இக்கட்டிடத்தைக் கட்டுவித்தனர். இக்கட்டிடம் மிட்டவுன் மான்ஹட்டனின் சிறப்பு வலயப் பகுதியில் அமைந்திருந்தபோதும், ஒரு கலப்புப் பயன்பாட்டு வளர்ச்சி என்ற வகையிலேயே இக்கட்டிடத்துக்கு அநுமதி கிடைத்தது. இக்கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டு இருந்தபோது பல சர்ச்சைகள் ஏற்பட்டன. பொன்விட் டெல்லர் அங்காடியில் இருந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சிலைகள் அழிக்கப்பட்டமை, டிரம்ப் கட்டுமான ஒப்பந்தகாரருக்குக் குறைவாகப் பணம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு, கட்டிடத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படாததால் டிரம்ப் வழக்கு வைத்தமை என்பன இவற்றுள் அடங்கும்.
இக்கட்டிடத்தின் கட்டுமானம் 1979 ஆம் ஆண்டு தொடங்கியது. கீழ்த்தளம், குடியிருப்புப் பகுதி, அலுவலகப் பகுதி, அங்காடிகள் என்பன, 1983 பெப்ரவரிக்கும் நவம்பருக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வெவ்வேறு நாட்களில் திரந்துவைக்கப்பட்டன. தொடக்கத்தில், வணிக, சில்லறை வணிகப் பகுதிகளைக் குறைவானோரே வாடகைக்கு எடுத்திருந்தன. குடியேற்ற அலகுகள், கட்டிடம் திறக்கப்பட்ட சில மாதங்களுக்குள்ளாகவே விற்றுத் தீர்ந்துவிட்டன. டிரம்பின் 2016 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தல் பிரசாரத் தலைமை அலுவலகம் இக்கட்டிடத்திலேயே அமைந்ததால், 2016க்குப் பின்னர் இக்கட்டிடத்துக்கு மக்கள் வருகை பெருமளவு அதிகரித்தது. டிரம்பின் 2020 ஆம் ஆண்டுத் தேர்தல் பிரசாரத் தலைமையகமும் இங்கேயே அமைந்துள்ளது.