![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d9/Map_of_Dari%25C3%25A9n_Gap-es.svg/langta-640px-Map_of_Dari%25C3%25A9n_Gap-es.svg.png&w=640&q=50)
டாரியன் வளைகுடா
From Wikipedia, the free encyclopedia
டாரியன் வளைகுடா (Darién Gap) கரிபியனின் உட்பகுதியில் காணப்படும் வளைகுடா ஆகும்.[1] [2][3][4] இவ்வளைகுடா 9° வடக்கு நோக்கியும் 77° மேற்கு நோக்கியும் கிழக்குக் கொலம்பியாக் கடற்கரைக்கும்,மேற்கு பனாமாக் கடற்கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. இவ்வளைகுடாவிற்குத் தென் பகுதியில் சோகா, ஊராபா விரிகுடாக்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஆட்ராடோ, லீயன் ஆகிய ஆறுகள் கலக்கின்றன.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d9/Map_of_Dari%C3%A9n_Gap-es.svg/320px-Map_of_Dari%C3%A9n_Gap-es.svg.png)
டாரியன் வளைகுடாவிற்கு டாரியன் குடியேற்றத்தின் நினைவாக டாரியன் எனப் பெயரிடப்பட்டது. இக்குடியேற்றம் கி.பி. 1510 ஆம் ஆண்டில் பனாமாவில் இஸ்துமஸ் என்னுமிடத்தில் ஏற்பட்டது.[5]