![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8b/Dan_Brown_bookjacket_cropped.jpg/640px-Dan_Brown_bookjacket_cropped.jpg&w=640&q=50)
டான் பிரவுன்
From Wikipedia, the free encyclopedia
டேனியல் கெர்ஹார்ட் பிரவுன் (Daniel Gerhard Brown பிறப்பு சூன் 22, 1964) ஓர் அமெரிக்க எழுத்தாளர், ராபர்ட் லாங்டன் புதினங்களான ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ் (2000), தி டா வின்சி கோட் (2003), தி லாஸ்ட் சிம்பல் (2009), இன்பெர்னோ (2009) மற்றும் ஆரிஜின் (2017) ஆகிய பரபரப்பு புதினங்களுக்காக பரவலாக அறியப்படுபவராவார். 2013). இவரது புதினங்கள் பொதுவாக 24 மணி நேரத்தில் நடக்கும் புதையல் வேட்டைகளை அடிப்படையாகக் கொண்டவை. [3] இவை குறியாக்கவியல், கலை மற்றும் சதி கோட்பாடுகளின் தொடர்ச்சியான கருப்பொருள்களைக் கொண்டுள்ளன. இவரது புத்தகங்கள் 57 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, 200 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அவற்றில் மூன்று, ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ், தி டா வின்சி கோட் மற்றும் இன்பெர்னோ ஆகிய மூன்று புதினங்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன, அவற்றில் தி லாஸ்ட் சிம்பல், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக எடுக்கப்பட்டது.
டான் பிரவுன் | |
---|---|
![]() | |
பிறப்பு | டேனியல் கெர்ஹார்ட் பிரவுன் [1] சூன் 22, 1964 (1964-06-22) (அகவை 60) எக்செடர், நியூஹாம்சயர் |
தொழில் | புதின எழுத்தாளர் |
கல்வி நிலையம் | ஆம்கர்ஸ்டு கல்லூரி |
வகை | பரபரப்பு, சாகச கதைகள் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | டிஜிட்டல் போட்ரசு டிசப்சன் பாயிண்டு ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ் த டா வின்சி கோட் தி லாஸ்டு சிம்பள் இன்பெர்னோ (புதினம்) ஆரிஜின் (புதினம்) |
துணைவர் | பிளைத் நியூலன் [2](தி. 1997; ம.மு. 2019) |
குடும்பத்தினர் | கிரிகோரி டபிள்யூ. பிரவுன் (சகோதரர்) |
கையொப்பம் | |
![]() | |
இணையதளம் | |
danbrown |
ராபர்ட் லாங்டன் புதினங்கள் கிறிஸ்தவ கருப்பொருள்கள் மற்றும் வரலாற்றுப் புனைகதைகளுடன் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவை. அதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. பிரவுன் தனது இணையதளத்தில் தனது புத்தகங்கள் கிறிஸ்தவத்திற்கு எதிரானவை அல்ல என்றும், தான் ஒரு "நிலையான ஆன்மீக பயணத்தில்" இருப்பதாகவும் கூறுகிறார். [4] இவர் தனது புத்தகமான தி டாவின்சி கோட் "ஆன்மீக விவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு பொழுதுபோக்கு கதை" என்றும், "நமது நம்பிக்கையை உள்வாங்குவதற்கும் ஆய்வு செய்வதற்கும் ஒரு நேர்மறையான ஊக்கியாக" இது பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறுகிறார். [5]