ஜெரார்டு குயூப்பர்
From Wikipedia, the free encyclopedia
ஜெரார்டு குயூப்பர் (Gerard Peter Kuiper) (English: /ˈkaɪpər/; டச்சு ஒலிப்பு: [ˈkœypər]; ஜெரித் பியேதர் குயூப்பர் (Gerrit Pieter Kuiper); திசம்பர் 7, 1905 – திசம்பர் 23, 1973) ஒரு டச்சு அமெரிக்க வானியலாளரும் கோள் அறிவியலாளரும் நிலாவியலாளரும் எழுத்தாளரும் பேராசிரியரும் ஆவார்.இவர் புத்தூழிக் கோள் அறிவியலின் தந்தையாகக் கருதப்படுபவர். இவர் பெயரால் குயூப்பர் பட்டை வழங்கப்படுகிறது.[1] இவர் சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியராக கார்ல் சாகனுக்கு முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டினார். இருவரும் 1958 இல் A119 படைசார் திட்டம் ஒன்றில் இணைந்து பணியாற்றினர். இது நிலாவில் அணுப்படைக்கலனை வெடிப்பதற்கான திட்டம் ஆகும்.[2]
விரைவான உண்மைகள் ஜெரார்டு குயூப்பர், பிறப்பு ...
ஜெரார்டு குயூப்பர் | |
---|---|
= ஜெரார்டு குயூப்பர் , 1964 | |
பிறப்பு | ஜெரித் பியெதர் குயூப்பர் (1905-12-07)திசம்பர் 7, 1905 தியூத்ஜெனார்ன், நெதர்லாந்து |
இறப்பு | திசம்பர் 23, 1973(1973-12-23) (அகவை 68) மெக்சிகோ மாநகர், மெக்சிகோ |
இறப்பிற்கான காரணம் | நெஞ்சடைப்பு |
தேசியம் | டச்சு அமெரிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலெய்டன் பல்கலைக்கழகம் (அறிவியல் இளவல், அறிவியல் முதுவர், இயற்பியல் முதுவர், முனைவர், அறிவியல் முதுமுனைவர்) |
பணி | வானியலாளர் கோள் அறிவியலாளர் நிலாவியலாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1933–1973 |
அறியப்படுவது | குயூப்பர் பட்டை |
வாழ்க்கைத் துணை | சாரா ஃபுல்லர் (1936–1973; இறப்பு) |
மூடு