ஜீனோடெர்மிடே
From Wikipedia, the free encyclopedia
ஜீனோடெர்மிடே (Xenodermidae) என்பது கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பாம்புகளின் குடும்பமாகும்.[3][4] ஜீனோடெர்மிடே குடும்பத்தில் உள்ள அனைத்து சிற்றினங்களும் சிறிய அல்லது மிதமான அளவிலான பாம்புகள் ஆகும். இவை 80 cm (31 அங்)க்கு மேல் வளர்வதில்லை. ஆனால் இவற்றின் பொதுவான நீளம் 55 cm (22 அங்)(வால் உட்பட) உள்ளன. இவை மறைந்து வாழ்வன. இரவாடுதல் வகையின. பொதுவாக ஈரமான வன வாழ்விடங்களில் வாழ்கின்றன. இவை சந்தர்ப்பவாத மாமிச உண்ணிகள். மற்ற முதுகெலும்புகளை வேட்டையாடி உண்ணும்.[4]
விரைவான உண்மைகள் ஜீனோடெர்மிடே, உயிரியல் வகைப்பாடு ...
ஜீனோடெர்மிடே | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ஜீனோடெர்மிடே கிரே, 1849 |
பேரினம் | |
6 பேரினங்கள், உரையினை காண்க | |
வேறு பெயர்கள் | |
மூடு