ஜிங்போ மக்கள்
From Wikipedia, the free encyclopedia
ஜிங்போ மக்கள் (Jingpo people) என்பவர்கள் சீனா, மியான்மர், இந்தியா ஆகிய நாடுகளில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் கச்சின் மக்களின் ஒரு மிகப்பெரிய துணைக்குழுவாக உள்ளனர். இவர்களின் சொந்த ஜிங்போ மொழியில் அனைத்து கச்சின் மக்களுக்கும் உரித்தான பொதுவான சொல் ஜிங்போ ஆகும்.[3]
விரைவான உண்மைகள் Jinghpo, Wunpong, Zaizo, Dungzo, 景頗, ကချင်, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
Jinghpo, Wunpong, Zaizo, Dungzo, 景頗, ကချင် | |
---|---|
கச்சின் பாரம்பரிய உடை | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மியான்மர் | 1–1.5 மில்லியன்[1] |
கச்சின் மாநிலம் | 540,763[2] |
சீனா | 147,828 |
இந்தியா | 7,958 |
சீனக் குடியரசு | 100–200 |
மூடு
ஜிங்போ மக்கள் பல பழங்குடி குழுக்களை பூர்விகமாக கொண்டவர்கள். இவர்கள் சண்டை திறன், சிக்கலான குலங்களுக்கிடையேயான உறவுகள், கைவினைத்திறன், மூலிகை மருத்துவம் மற்றும் காட்டில் உயிர்வாழும் திறன் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர்கள். கச்சின் மக்கள் பர்மாவின் மிகப்பெரிய இனக்குழுவினர் ஆவர். சீனாவில் ஜிங்போ சிறுபான்மை இனக்குழுவினரில் ஒன்றாவர், அங்கு அவர்கள் 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 147,828 பேர் இருந்தனர்.