![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a6/Tomb_of_Emperor_Jahangir.jpg/640px-Tomb_of_Emperor_Jahangir.jpg&w=640&q=50)
ஜஹாங்கிரின் கல்லறை
பாக்கித்தானில் உள்ள கட்டிடம் / From Wikipedia, the free encyclopedia
ஜஹாங்கிரின் கல்லறை (Tomb of Jahangir) என்பது 17 ஆம் நூற்றாண்டின் முகலாய பேரரசர் ஜஹாங்கீருக்காக கட்டப்பட்ட கல்லறையாகும் . இந்த கல்லறையின் வரலாறு 1637 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. இது பாகிஸ்தானின் பஞ்சாபின் இலாகூரில் உள்ள சக்தாரா பாக்,அருகே ராவி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. [1] இந்த தளம் அதன் உட்புறங்களுக்கு பிரபலமானது. அவை சுவரோவியங்கள் மற்றும் பளிங்குகளால் விரிவாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் அதன் வெளிப்புறம் பியட்ரா துராவால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லறை, அருகிலுள்ள அக்பரி சராய் மற்றும் ஆசிப் கானின் கல்லறை ஆகியவற்றுடன், தற்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய அந்தஸ்துக்கான தற்காலிக பட்டியலில் உள்ள ஒரு குழுவின் பகுதியாகும். [2]
விரைவான உண்மைகள் ஆள்கூறுகள், இடம் ...
مقبرہُ جہانگیر | |
![]() | |
ஆள்கூறுகள் | 31.6225°N 74.3032°E / 31.6225; 74.3032 |
---|---|
இடம் | லாகூர், பஞ்சாப், பாக்கித்தான் |
முடிவுற்ற நாள் | 1637 |
மூடு