From Wikipedia, the free encyclopedia
சோலார் இம்பல்சு-2 அல்லது சூரிய ஆற்றல் வானூர்தி-2 (Solar Impulse-2) , சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெர்ட்ராண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் ஆகிய விமானிகள் சூரிய ஆற்றலால் இயங்கும் இவ்வானூர்தியை 13 ஆண்டு கால ஆய்வு முடிவில் வடிவமைத்துள்ளனர். 2740 கிலோ கிராம் எடை கொண்ட இந்த விமானத்தில், 135 மைக்ரேன் தடுமம் (மனித தலைமுடி அளவு) எடை கொண்ட 17,248 சூரிய மின்கலத் தகடுகள் (சோலார் செல்கள்) பொருத்தப்பட்டு, அதன் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்து, அதனை 633 கிலோ கிராம் எடை கொண்ட நான்கு லித்தியம் பாலிமர் மின்கலங்கள் மூலம் சேமிக்கப்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தி விமானத்தின் புரோப்பல்லர்கள் எனப்படும் சுழலிகளால் எஞ்சின்கள் இயங்குகிறது.
சோலார் இம்பல்சு-2 வானூர்தி | |
---|---|
சோலார் இம்பல்சு-2 (HB-SIB) வானூர்தி.. | |
வகை | சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் சோதனை ஓட்ட வானூர்தி |
உருவாக்கிய நாடு | சுவிட்சர்லாந்து |
உற்பத்தியாளர் | சோலார் இம்பல்சு நிறுவனம் |
வடிவமைப்பாளர் | பெர்ட்ராண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் |
முதல் பயணம் | 9 மார்ச்சு 2015 |
மணிக்கு 50 முதல் 100 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இவ்வானூர்தி 8,500 மீட்டர் (26,000 அடி) உயரம் வரை பறக்க வல்லது. தொடர்ந்து 120 மணி நேரம் வரை இவ்விமானத்தை இயக்க முடியும். இந்த விமானத்தின் 72 மீட்டர் (236 அடி) நீள இறக்கைகளில் சூரியத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. பகலில் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஆற்றலைச் சேமித்து இவ்வானூர்தி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பகலில் சூரிய ஒளியின் காரணமாக நிறைய மின்சாரம் கிடைக்கும் என்பதால் சோலார் இம்பல்சு வானூர்தி பகல் நேரங்களில் அதிக பட்சமாக 28 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். இரவில் மின்சாரத்தை மிச்சப்படுத்த அதிக பட்சமாக 3000 அடி உயரத்தில் பறக்கும்.
இவ்விமானத்தில் ஒரு விமானி மட்டுமே அமரக்கூடிய வகையில் இருக்கை இருப்பதால் பெர்ட்ராண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் ஆகிய விமானிகள் இவ்விமானத்தை மாற்றி மாற்றி ஓட்டுகிறார்கள்.[2]. [3]. [4]
இவ்வானூர்தி 9 மார்ச் 2015, திங்களன்று அபுதாபிலிருந்து புறப்பட்டு, ஏமன் நாட்டுத் தலைநகர் மஸ்கட்டில் தரை இறங்கி, பின் அரபுக் கடல் மேல் பறந்து இந்தியா, மியான்மர், சீனா ஆகிய நாடுகளில் தங்கி பின், பசிபிக் பெருங்கடல் மேல் எங்கும் நிற்காமல் தொடர்ந்து பறந்து ஐக்கிய அமெரிக்காவில் தரையிறங்கி பின் அட்லாண்டிக் பெருங்கடல் மேல் தொடர்ந்து பறந்து, மொராக்கோ அல்லது தெற்கு ஐரோப்பா ஆகிய நாடுகளில் ஒன்றில் தங்கி, மீண்டும் புறப்பட்ட இடமான அபுதாபிக்கு திரும்பும்.
எந்த எரிபொருளும் இல்லாமல் சூரிய ஒளி சக்தியால் மட்டுமே இயங்கும் இவ்விமானத்தின் மூலம் உலகைச் சுற்றி வந்து சாதனை படைக்கும் முயற்சியில் சோலார் இம்பல்சு-2 ஈடுபட்டுள்ளது. பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் எங்கும் நிற்காமல், நீண்ட தூரப் பயணத்திற்கான சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதனை புரிந்திட முடியும் என்பதை உலகிற்கு தெரிவிக்கவும்; தூய்மையான தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நோக்குடன் பயணிக்கிறது என சோலார் இம்பல்சு-2வை உருவாக்கியதாக சுவிட்சர்லாந்து நாட்டு விமானிகள் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் மற்றும் பெர்ட்ராண்ட் பிக்கார்டு' கூறுகிறார்கள்.
ஆதாரங்கள்:[7]
படி நிலை | புறப்பட்ட நேரம் | புறப்படுமிடம் | சேருமிடம் | பறந்த தொலைவு | பறந்த நேரம் | சராசரி வேகம் | அதிகபட்ச பறப்பு உயரம் | விமானி |
---|---|---|---|---|---|---|---|---|
1 | 9 மார்ச் 2015 - 03:12 UTC | அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் | மஸ்கட், ஓமன் | 188 க. மை-(349 கி. மீ.,) | 13.01 மணி | 33.9 கி. மீ., | 20,942 அடி (6,383 மீ) | ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[8] |
2 | 10 மார்ச் 2015 - 02:35 UTC | மஸ்கட், ஓமன் | அகமதாபாத், இந்தியா[9] | 802 க. மை-(1,485 கி. மீ.,) | 15.20 மணி | 96.9 கி. மீ., | 29,114 அடி (8,874 மீ) | பெர்ட்ராண்ட் பிக்கார்டு [11] |
3 | 18 மார்ச் 2015 - 01:48 UTC | அகமதாபாத், இந்தியா | வாரணாசி, இந்தியா[12].[13] | 578 க. மை, (1,071 கி, மீ.,) | 15.56 மணி | 91.7 கி. மீ., | 17,001 அடி (5,182 மீ) | ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[14] |
4 | 18 மார்ச் 2015 - 23:52 UTC | வாரணாசி, இந்தியா | மாண்டலே, மியான்மர்[15] | 756 க. மை, (1,401 கி, மீ.,) | 13.29 மணி | 103.7 கி. மீ., | 27,000 அடி (8,230 மீ) | பெர்ட்ராண்ட் பிக்கார்டு[16] |
5 | 29 மார்ச் 2015 - 21:06 UTC | மாண்டலே, மியான்மர்[17] | சோங்கிங், சீனா[18] | 788 க. மை, (1,459 கி, மீ.,) | 20.29 மணி | 71.2 கி. மீ., | பெர்ட்ராண்ட் பிக்கார்டு[19] | |
6 | 20 ஏப்ரல் 2015 - 22:06 UTC | சோங்கிங், சீனா | நாஞ்சிங், சீனா[20] | 726 க. மை (1,344 கி. மீ) | 17.22 மணி | 77.4 கி.மீ | 12,000 அடி (3,700 m) | பெர்ட்ராண்ட் பிக்கார்டு[21][22] |
7 | 30 மே 2015 - 18:41 சனி UTC[23][24] | நாஞ்சிங், சீனா | நகோயா, ஜப்பான்N1 | 1,540 க. மை (2,852 கி. மீ) | 44. 10 மணி | 64.6 கி. மீ | 28000 அடி | ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[25] |
8 | 28 சூன் 2015 - 18:03 UTC | நகோயா, ஜப்பான் | ஹவாய், ஐக்கிய அமெரிக்கா[26] | 4,474க. மை (8,285 கி. மீ) | 118 மணி | 70.3 கி. மீ | 30,052 அடி | ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் |
9 | 21 ஏப்ரல் 2016 16:15UTC | ஹவாய், யுஎஸ்எ | மவுண்ட் வியூ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா[27][28] | 4086 கி மீ | 62மணி & 29 நிமிடங்கள் | 65.39 கி மீ | 8634 மீட்டர் | பெர்ட்ராண்ட் பிக்கார்டு[29][30] |
10 | 2 மே 2016 12:03 UTC | மவுண்ட் வியூ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | பீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா | 1113 கி மீ | 15 மணி & 52 நிமிடம் | 86 கி மீ | 6706 மீட்டர்/22,000 அடி | ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[31] |
11 | 12 மே 2016 10:05 UTC | பீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா | துல்சா, ஓக்லகோமா, ஐக்கிய அமெரிக்கா | 1570 கி மீ | 8 மணி & 10 நிமிடம் | 86.42 கி மீ | 22,001 அடி (6,706 மீ) | பெர்ட்ராண்ட் பிக்கார்டு[32] |
12 | 21 மே 2016 | துல்சா, ஓக்லகோமா, ஐக்கிய அமெரிக்கா | டேட்டன், ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா | 1113 கி மீ | 16 மணி & 34 நிமிடங்கள் | 67.18 கி மீ | 21,001 அடி (6,401 மீ) | ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் [33] |
13 | 25 மே 2016 | டேட்டன், ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா | லேஹை சமவெளி, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா | 1044 கி மீ | 16 மணி & 49 நிமிடங்கள் | 62.2 கி மீ | 15,000 அடி (4,572 மீ) | பிக்கார்டு[34] |
14 | 11 சூன் 2016 | லேஹை சமவெளி, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா | நியூயார்க் நகரம் நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா | 265 கி ம | 4 மணி & 41 நிமிடங்கள் | 56.6 கி மீ | 3,002 அடி (915 மீ) | ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[35] |
15 | 20 சூன் 2016 | நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா | செவீயா, ஸ்பெயின் | 6265 கி மீ | 71 மணி & நிமிடங்கள் | 88.1 கி மீ | 27,999 அடி (8,534 மீ) | பிக்கார்டு[36] |
16 | 11 சூலை 2016 04:20 | செவீயா, ஸ்பெயின் | கெய்ரோ, எகிப்து | 3745 கி மீ | 48 மணி & நிமிடங்கள் | 76.7 கி மீ | 27,999 அடி (8,534 மீ) | ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்[37][38] |
17 | 23 சூலை 2016 | கெய்ரோ, எகிப்து | அபுதாபி, ஐஅஅ | 2794 கி மீ | 48 மணி & 37 நிமிடங்கள் | 57.5 கி மீ | 27,999 அடி (8,534 m) | பிக்கார்டு[39][40] |
Data from சோலார் இம்பல்சு திட்ட நிறுவனம்[41]
பொதுவான அம்சங்கள்
செயல்திறன்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.