From Wikipedia, the free encyclopedia
சோம்னியோசிடே (Somniosidae) என்பது இசுகுலிபார்மிசு வரிசையினைச் சார்ந்த சுறாக்களின் குடும்பமாகும். இது பொதுவாகத் தூங்கும் சுறாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. "தூங்கும் சுறா" என்ற பொதுவான பெயர் இவற்றின் மெதுவான நீச்சல், குறைந்த செயல்பாட்டு நிலை மற்றும் ஆக்குரோசமில்லா குண இயல்பு ஆகியவற்றின் காரணமாக இடப்பட்டது.[1][2]
சோம்னியோசிடே (தூங்கும் சுறா) | |
---|---|
சோமனியோசசு மைக்ரோசெப்பாலசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | காண்ட்ரிக்தியீசு |
வரிசை: | இசுகோலிபார்மிசு |
குடும்பம்: | சோம்னியோசிடே |
உயிரியற் பல்வகைமை | |
6 பேரினம், 20 சிற்றினம்; உரையினைப் பார்க்கவும் |
சோம்னியோசிடே வரிசைச் சுறாக்கள் கீழ்கண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.
தூங்கும் சுறாக்களின் வயிற்றிலிருந்து மீட்கப்பட்ட அலகுகளிலிருந்து, இவை மாபெருங்கணவாயினை உணவாக உட்கொள்கின்றன என அறியப்படுகிறது.
சோம்னியோசிடே குடும்பத்தின் கிரீன்லாந்துச் சுறாக்கள் ஐசுலாந்தில் உணவுக்காக வேட்டையாடப்படுகின்றன. நவீனக் காலங்களில், ஹேகர்ல் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் பல கிரீன்லாந்து சுறாக்கள், மீன்பிடி கப்பல்களிலிருந்து வாங்கப்படுகின்றன. இவை மீன்பிடி வலைகளில் சிக்குபவையாக உள்ளன. இச்சுறாக்களின் உடல் ஆழமற்ற குழியில் ஒன்றில் புதைக்கப்பட்டு புளிக்கவைக்கப்படுகிறது. சுறாவின் மேல் கற்கள் இடப்பட்டு, உடலிலிருந்து யூரியா மற்றும் மூன்றுமெதிலாமைன் ஆக்சைடு போன்ற நச்சு திரவங்கள் அழுத்தத்தின் மூலம் வெளியேறுகின்றன. இந்த இறைச்சி பல மாதங்களாகப் பதப்படுத்தப்பட்டு மனித நுகர்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.