சோடியம் பெராக்சைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
சோடியம் பெராக்சைடு (Sodium peroxide) என்பது Na2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் அதிக அளவு ஆக்சிசனில் எரிக்கப்படும்போது இந்த மஞ்சள் நிற உலோக பெராக்சைடு திண்மம் உருவாகிறது [3]. ஒரு வலிமையான காரமான இச்சேர்மம் Na2O2•2H2O2•4H2O, Na2O2•2H2O, Na2O2•2H2O2, மற்றும் Na2O2•8H2O. போன்ற நீரேற்று வடிவங்களில் காணப்படுகிறது.[4].இதில் எண் நீரேற்றை தயாரிப்பது எளிமையாகும். வெண்மை நிறத்திலுள்ள இது நீரற்ற இச்சேர்மத்திலிருந்து மாறுபடுகிறது [5]. டைசோடியம் டையாக்சைடு, புளோகூல், சோலோசோன், டைசோடியம் பெராக்சைடு என்ற பெயர்களாலும் சோடியம் பெராக்சைடு அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டைசோடியம் டையாக்சைடு புளொகூல் சோலோசோன் டைசோடியம் பெராக்சைடு | |
இனங்காட்டிகள் | |
1313-60-6 Y | |
ChemSpider | 14119 N |
EC number | 215-209-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14803 |
வே.ந.வி.ப எண் | WD3450000 |
| |
UN number | 1504 |
பண்புகள் | |
Na2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 77.98 கிராம்/மோல் |
தோற்றம் | மஞ்சள், வெண்மை தூள் |
அடர்த்தி | 2.805 கிராம்/செ.மீ3 |
உருகுநிலை | 460 °C (860 °F; 733 K) (சிதைவடையும்) |
கொதிநிலை | 657 °C (1,215 °F; 930 K) (சிதைவடையும்) |
தீவிர வினை | |
கரைதிறன் | அமிலங்களில் கரையும் காரங்களில் கரையாது எத்தனால் உடன் வினைபுரியும் |
−28.10•10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−515 கிலோயூல்.மோல்−1[1] |
நியம மோலார் எந்திரோப்பி S |
95 யூல்/(மோல்•கெல்வின்)[1] |
வெப்பக் கொண்மை, C | 89.37 யூல்/(மோல்•கெல்வின்) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
ஈயூ வகைப்பாடு | O C |
R-சொற்றொடர்கள் | R8, R35 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S8, S27, S39, S45 |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் பெராக்சைடு பொட்டாசியம் பெராக்சைடு ருபீடியம் பெராக்சைடு சீசியம் பெராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு