சோடியம் சிலிக்கேட்டு
From Wikipedia, the free encyclopedia
சோடியம் சிலிக்கேட்டு என்ற வேதிச்சேர்மத்தின் சூத்திரம் Na
2xSiO
2+x அல்லது (Na
2O)
x·SiO
2, இதற்கு இதே போன்று, சோடியம் மெட்டாசிலிகேட்டு Na
2SiO
3, சோடியம் ஆர்த்தோ சிலிகேட்டு Na
4SiO
4, மற்றும் சோடியம் பைரோசிலிகேட்டு Na
6Si
2O
7 உள்ளன.இவற்றின் எதிர்மின் அயனிகள் பெரும்பாலும் பலபடிகளாக உள்ளன. இச் சேர்மங்கள் பொதுவாக நிறமற்ற ஊடுருவும் திண்மங்கள் அல்லது வெள்ளை பொடிகளாக உள்ளன. மேலும் நீரில் கரையக்கூடிய பல்வேறு அளவுகளில் கரைகின்றன.
இக்கலைவகள் அனைத்தும் சோடியம் சிலிக்கேட்டு என்ற பொதுவான பெயரைக் கொண்டுள்ளன. பொதுவாக மெட்டா சிலிக்கேட்டு தண்ணீர் கண்ணாடி, அல்லது திரவ கண்ணாடி என்று அழைக்கப்படுகிறது. சீமைக்காரை, செயற்படாத தீ பாதுகாப்பு, நெசவுத்தொழில் மற்றும் மரம் அறுவைத் தொழில், அனல் தாங்கும் மண்பாண்டப்பொருட்கள் உற்பத்தி, பசைகள், மற்றும் சிலிக்கா களி முதலிய பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படுகிறது. வணிக தயாரிப்புகளில் நீர்க்கரைசலாகவோ அல்லது திண்மமாகவோ பெறப்படுகின்றன. இரும்பு கலந்த மாசுக்கள் கலந்துள்ளதால் பெரும்பாலும் பச்சை அல்லது நீலமாக காணப்படுகின்றன.