சேம்பு
From Wikipedia, the free encyclopedia
சேம்பு (அ) சேப்பங் கிழங்கு (Colocasia esculenta)[3][4] என்பது ஒரு பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த ஒரு வித்திலைத் தாவரமாகும். இத்தாவரத்தின் குடும்பப் பெயர் அரேசியா (Araceae) என்பதாகும். தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணை கண்டத்தைப்[1][5] பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் உலகளவில் வெப்பமண்டலம் மற்றும் துணை வெப்பமண்டல பகுதியிலும் பயிரிடப்படுகிறது. இது ஒரு மூலிகைத்தாவரம் என்பதாலும், இதன் கிழங்கு உணவாகப் பயன்படுவதாலும் ஆசியப் பகுதியில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்பட்டுவருகிறது.
விரைவான உண்மைகள் சேம்பு, உயிரியல் வகைப்பாடு ...
சேம்பு | |
---|---|
சேம்பு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Alismatales |
குடும்பம்: | Araceae |
துணைக்குடும்பம்: | Aroideae |
சிற்றினம்: | Colocasieae |
பேரினம்: | Colocasia Schott |
Range of the genus Colocasia. | |
வேறு பெயர்கள் [1][2] | |
சேப்பங் கிழங்கு Schott |
மூடு