![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7e/Asian_Elephant_in_Inani%252C_Cox%2527s_Bazar.jpg/640px-Asian_Elephant_in_Inani%252C_Cox%2527s_Bazar.jpg&w=640&q=50)
சேக் ஜமால் இனானி தேசிய பூங்கா
From Wikipedia, the free encyclopedia
சேக் ஜமால் இனானி தேசிய பூங்கா (Sheikh Jamal Inani National Park)(இனானி தேசிய பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது) வங்காளதேசத்தில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்கா ஆகும்.[1] காக்ஸ் பஜார் மாவட்டத்தின் கீழ் உக்கியா உபாசிலாவில் அமைந்துள்ள இந்த பூங்கா வங்காளதேசத்தின் முதல் அதிபர் சேக் முஜிபுர் ரஹ்மானின் இரண்டாவது மகனான சேக் ஜமாலின் பெயரால் அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் சேக் ஜமால் இனானி தேசிய பூங்கா, அமைவிடம் ...
சேக் ஜமால் இனானி தேசிய பூங்கா | |
---|---|
![]() இனாய் தேசிய பூங்காவில் ஆசிய யானை | |
அமைவிடம் | காக்ஸ் பஜார் மாவட்டம், சாதோகிராம், வங்காள தேசம் |
ஆள்கூறுகள் | 21.1400025°N 92.0820834°E / 21.1400025; 92.0820834 |
பரப்பளவு | 7,085 ஹெக்டேர் |
நிறுவப்பட்டது | 9 சூலை 2019 |
மூடு
வங்காளதேச அரசு இதை 9 சூலை 2019 அன்று தேசிய பூங்காவாக அறிவித்தது.[2] ஆசிய யானையின் தாயகம் இது. இனானி தேசிய பூங்கா 7,085 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[3] இது உக்கியாவின் இனானி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது.