![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d1/Sarawaksriaman.png/640px-Sarawaksriaman.png&w=640&q=50)
செரி அமான் பிரிவு
மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள பிரிவு / From Wikipedia, the free encyclopedia
செரி அமான் பிரிவு (மலாய் மொழி: Bahagian Sri Aman; ஆங்கிலம்: Sri Aman Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். முன்பு செரி அமான் பிரிவு; சரவாக்கின் இரண்டாம் பிரிவின் (Second Division) ஒரு பகுதியாக இருந்தது. இது முன்பு சிமாங்காங் மாவட்டம் (Simanggang District) என்று அழைக்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் செரி அமான் பிரிவு, நாடு ...
செரி அமான் பிரிவு | |
---|---|
Sri Aman Division | |
சரவாக் | |
![]() சரவாக் மாநிலத்தில் செரி அமான் பிரிவு | |
ஆள்கூறுகள்: 1°14′7″N 111°28′11″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | செரி அமான் பிரிவு |
நிர்வாக மையம் | சிமாங்காங் |
உள்ளூர் நகராட்சி | 1. செரி அமான் மாவட்ட மன்றம் Majlis Daerah Sri Aman (MDSA) 2. லுபோக் அந்து மாவட்ட மன்றம் Majlis Daerah Lubok Antu (MDLA) |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,466.7 km2 (2,110.7 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,11,400 |
• அடர்த்தி | 20/km2 (53/sq mi) |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | QB |
மூடு
1860-ஆம் ஆண்டில் சரவாக் மாநிலத்தில் தொடங்கப்பட்ட இந்த பிரிவு (Division) முறை இன்றும் நீடிக்கிறது. முன்பு ஐந்து பிரிவுகள் மட்டுமே இருந்தன. அவற்றுள் அப்போதைய இரண்டாம் பிரிவில், இப்போதைய பெத்தோங் பிரிவு; மற்றும் செரி அமான் பிரிவு ஆகியவை பிரிவுகளும் அடங்கும்.