![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5c/G%25C3%25A9rard_Depardieu_Cannes_2015_3.jpg/640px-G%25C3%25A9rard_Depardieu_Cannes_2015_3.jpg&w=640&q=50)
செரார்டு தெபர்டியு
From Wikipedia, the free encyclopedia
செரார்டு சேவியர் மார்சல் தெபர்டியு (Gérard Xavier Marcel Depardieu (பிரெஞ்சு மொழி: [ʒeʁaʁ dəpaʁdjø] (கேட்கⓘ);
செரார்டு தெபர்டியு | |
---|---|
![]() தெபர்டியு 2015 கேன்ஸ் பட விழாவில் | |
பிறப்பு | செரார்டு சேவியர் மார்சல் தெபர்டியு 27 திசம்பர் 1948 (1948-12-27) (அகவை 75) சதியுரக்ஸ், இந்த்ரே, பிரான்ஸ் |
குடியுரிமை | பிரான்ஸ் மற்றும் உருசியா |
பணி | நடிகர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1964–தற்போது வரை |
துணைவர் | கரோல் பக்குவத் (c. 1997; செப். 2005) கிளமென்டின் இகு(c. 2005) |
வாழ்க்கைத் துணை | எலிசபெத் தெபர்டியு (தி. 1971–1996) |
பிள்ளைகள் | கில்லமே தெபர்டியு (இறப்பு), சூலி தெபர்டியு, ரோசான, சீன் |
(பிறப்பு 27 திசம்பர் 1948),[1] என்பவர் பிரெஞ்சு நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொழில் முனைவோர் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு முதல் சுமார் 170 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1980 ஆம் ஆண்டில் இவர் தி லாஸ்ட் மெட்ரோ எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பிற்கு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன. மேலும் சிறந்த நடிகருக்கான சீசர் விருதும் கிடைத்தது.
1985 இல் போலீஸ் எனும் திரைப்படத்தில் நடித்ததற்காக வெனிசு திரைப்படத் திருவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார். சீன் தி புலோரெட் (1986) மற்றும் சைரனோ தி பெர்கெராக் (1990), ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக கான் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார். மேலும் இரண்டாவது முறையாக சீஸர் விருதும் , அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
இவர் பீட்டர் வெயிருடன் 1990 ஆம் ஆண்டில் கிரீன் கார்டு [2] எனும் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருது பெற்றார். அதன் பிறகு பல பெரிய நிதித் தயாரிப்பு உள்ள ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ரிட்லி ஸ்காட்டின் 1492:கான்குவெஸ்ட் ஆப் பேரடைஸ் (1992), கென்னத் பிரனக்கின் ஹேம்லெட் (1996),[3] ராண்டல் வாலசின் தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க் (1998) மற்றும் ஆங் லீயின் பையின் வரலாறு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இவர் செவாலியே விருது பெற்றுள்ளார். இவர் உருசியா நாட்டின் குடியுரிமையை ஜனவரி, 2013 இல் பெற்றார். பின் 2013 , ஜனவரியில் மொண்டெனேகுரோவின் பண்பாட்டுத் தூதரானார். நகைச்சுவைத் திரைப்படமான ஆஸ்டிரிக்ஸ் படங்களில் ஓபிலிக்ஸாக நடித்துள்ளார்.[4]