![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3c/Roan_antelope_%2528Hippotragus_equinus_equinus%2529_male.jpg/640px-Roan_antelope_%2528Hippotragus_equinus_equinus%2529_male.jpg&w=640&q=50)
செம்பழுப்பு மறிமான்
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு சவன்னா மரிமான் / From Wikipedia, the free encyclopedia
Teleostomi
செம்பழுப்பு மறிமான் Roan antelope | |
---|---|
![]() | |
தென்னாப்பிரிக்காவின் ஸ்வாலு கலஹாரி ரிசர்வ் ஈக்வினசில் எச். இ. ஈக்வினஸ் | |
![]() | |
செனிகலில் எச். இ. கோபா | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Hippotraginae |
பேரினம்: | Hippotragus |
இனம்: | H. equinus |
இருசொற் பெயரீடு | |
Hippotragus equinus (É. Geoffroy, 1803) | |
![]() | |
range | |
வேறு பெயர்கள் | |
List
|
செம்பழுப்பு மறிமான் ( Roan antelope ) என்பது மேற்கு, நடு, தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு சவன்னா மறிமான் ஆகும்.[2] இதன் ரோன் நிறத்திற்காக (செம்பழுப்பு) ரோன் மறிமான் என அழைக்கப்படுகிறது. இதன் அடிவயிறு வெளுத்ததகாவும், புருவங்களிலும், கன்னங்களிலும் வெள்ளையாக இருக்கும். இவதன் முகம் கருப்பாக இருக்கும் பெண் மான்களின் நிறம் சற்று இளநிறத்தில் இருக்கும். இது பெரிய மறிமான்களில் ஒன்றாகும். இது குதிரையைப் போன்ற உடலும், தலை அமைப்பும் கொண்டது. குதிரைக்கு இருப்பதுபோல் பிடரிமயிர் இதற்கும் உண்டு. ஆண் மானிற்கும் பெண் மானிற்கும் கொம்புகள் உண்டு. ஆனால் ஆண் மானின் கொம்புகள் நீண்டவையாகவும், உறுதியானவையாகவும் இருக்கும். இது தலையிலிருந்து வால் நுணிப்பகுதி வரை 190–240 செமீ (75–94 அங்குலம்) நீளம் இருக்கும். இதில் வாலின் நீளம் 37–48 செமீ (15–19 அங்குலம்) ஆகும். ஆண் மான்களின் எடை 242–300 கிலோ மற்றும் பெண் மான்கள் 223–280 கிலோ எடை கொண்டவை. தோள்பட்டை வரை இவற்றின் உயரம் சுமார் 130–140 செமீ (51–55 அங்குலம்) ஆகும்.[3][4][5]