![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/35/Sarawakbintulusebauh.png/640px-Sarawakbintulusebauh.png&w=640&q=50)
செபாவு மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் ஒரு மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
செபாவு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Sebauh; ஆங்கிலம்: Sebauh District; சீனம்: 民都鲁县) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; பிந்துலு பிரிவில் ஒரு மாவட்டமாகும். இதன் எல்லைகளாக மிரி மாவட்டம், பாராம் மாவட்டம், காப்பிட் பிரிவு, பெலாகா மாவட்டம் மற்றும் தாதாவு மாவட்டம் ஆகியவை உள்ளன.[1]
விரைவான உண்மைகள் செபாவு மாவட்டம், நாடு ...
செபாவு மாவட்டம் | |
---|---|
Sebauh District | |
சரவாக் | |
![]() | |
ஆள்கூறுகள்: 03°14′49″N 113°17′59″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | பிந்துலு பிரிவு |
மாவட்டம் | பிந்துலு மாவட்டம் |
நிர்வாக மையம் | செபாவு நகரம் |
மாவட்ட அலுவலகம் | பிந்துலு |
உள்ளூர் நகராட்சி | பிந்துலு மேம்பாட்டு ஆணையம் (Bintulu Development Authority) |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,262.9 km2 (2,032.0 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 33,046 |
• அடர்த்தி | 6.3/km2 (16/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 97000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | QT |
மூடு
செபாவு நகரம் (Sebauh Town), செபாவு மாவட்டத்தின் நிர்வாகம் மற்றும் பொருளாதார மையமாக விளங்குகிறது.
செபாவு மாவட்டம்; பிந்துலு நகரத்திற்கு வடகிழக்கே 50 கி.மீ. (31 மைல்); சிபு மாவட்டத்திற்கு வடகிழக்கே 216 கி.மீ. (134 மைல்); மிரி மாவட்டத்திற்கு தென்மேற்கே 200 கி.மீ. (120 மைல்) தொலைவில் அமைந்து உள்ளது.