![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cb/Xenon_tetrafluoride.png/640px-Xenon_tetrafluoride.png&w=640&q=50)
செனான் நான்குபுளோரைடு
From Wikipedia, the free encyclopedia
செனான் டெட்ராபுளோரைடு (Xenon tetrafluoride) என்பது முதன்முதலில் கண்டறியப்பட்ட மந்த வாயுக்களின் இருமூலக்கூறு வேதிச் சேர்மமாகும்.[3] இதனுடைய மூலக்கூறு வாய்பாடு XeF
4 என்பதாகும். செனானும் புளோரினும் (F
2) வேதி வினை புரிந்து செனான் டெட்ராபுளோரைடு உருவாகிறது. இவ்வினைக்கான வேதியியற் சமன்பாடு கீழே தரப்பட்டுள்ளது:[4][5]
- Xe + 2 F
2 → XeF
4
![]() | |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
செனான் டெட்ராபுளோரைடு | |||
இனங்காட்டிகள் | |||
13709-61-0 ![]() | |||
ChemSpider | 109927 ![]() | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 123324 | ||
| |||
பண்புகள் | |||
XeF 4 | |||
வாய்ப்பாட்டு எடை | 207.2836 கி மோல்l−1 | ||
தோற்றம் | வெண் படிகம் | ||
அடர்த்தி | 4.040 g cm−3, solid | ||
உருகுநிலை | 117 °C (243 °F; 390 K) sublimates[1] | ||
வினைபுரியும் | |||
கட்டமைப்பு | |||
ஒருங்கிணைவு வடிவியல் |
D4h | ||
மூலக்கூறு வடிவம் | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 D | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−251 kJ·mol−1[2] | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
146 J·mol−1·K−1[2] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
வெப்பம் உமிழ் வினையான இவ்வினையில் 251 கிஜூ/மோல் ஆற்றல் வெளிவிடப்படுகிறது.[3]
சாதராண நிலையில் செனான் டெட்ராபுளோரைடு நிறமற்ற படிகமாகக் காணப்படுகிறது. 1963 ஆம் ஆண்டில் நடைபெற்ற அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு நிறமாலையியல், படிகங்களின் அணு மற்றும் மூலக்கூறு அமைப்பை அறிய உதவும் எக்சு-கதிர் படிகவியல் ஆய்வுகள் மூலமாக இதனுடைய படிகவடிவம் கண்டறியப்பட்டது.[6][7] இதனுடைய சதுரச் சமதள மூலக்கூறு அமைப்பில் மூலக்கூறின் சமதளத்திற்கு மேலும் கீழுமாக தனித்த இலத்திரன் இரட்டைகள் காணப்படுகின்றன. நியூட்ரான் விளிம்பு வளைவு அறிவியல் மற்றும் வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை ஆகியன இவ்வமைப்பிற்கு வலுசேர்த்து தெளிவுபடுத்துகின்றன.[8]
செனான் டெட்ராபுளோரைடு 115.7°செ வெப்பநிலையில் (240.26 °ப) பதங்கமாகிறது.
செனானின் பிற புளோரைடுகள் போலவே செனான் டெட்ரா புளோரைடும் ஆற்றல் உமிழும் வினையை வெளிப்படுத்துகிறது. சாதாரண வெப்பநிலையில் வெப்பம் மற்றும் அழுத்தப் பண்புகளில் நிலைப்புத்தன்மை பெற்றுள்ளது. செனானின் அனைத்து புளோரைடுகளும் நீருடன் உடனடியாக வினைபுரிந்து தூய்மையான செனான் வாயு, ஐதரசன் புளோரைடு மற்றும் மூலக்கூறு ஆக்சிசன் ஆகியனவற்றை வெளிவிடுகின்றன. சற்று ஈரமான காற்றிலேயே இவ்வினை நிகழும் என்பதால் அனைத்து செனான் புளோரைடுகளும் ஈரமில்லாச் சூழலில் பாதுகாக்கப்பட வேண்டும்.